வால்பாறை பகுதிக்கு செல்வோர் இபாஸ்

 தமிழக அரசின் வழிகாட்டுதல்நெறி முறைகளின் படி சுற்றுலா தலங்களுக்கு செல்வதற்கான இபாஸ் முறை ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து மாவட்டத்தில் உள்ள சுற்றுலாத் தளங்களில் மக்கள் குவிய துவங்கினர். வால்பாறையிலும் மக்கள் அதிகளவில் வரத்துவங்கினர்.


இதனிடையே வால்பாறை பகுதியில் கொரோனா தொற்று அதிகரித்து காணப்படுகிறது. இதனையடுத்து வால்பாறைக்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு இபாஸ் கட்டாயமாக்கப்பட்டு உள்ளது.


இது குறித்து மாவட்ட கலெக்டர் ராசாமணி வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் வால்பாறை செல்வதற்கு இபாஸ் முறை அமல்படுத்தப்பட்டுள்ளது என தெரிவித்து உள்ளார்.


வால்பாறை பகுதிக்கு செல்வோர் இபாஸ் பெற வேண்டும் என மாவட்ட கலெக்டர் அறிவித்துள்ளார்.