இலவச வீட்டு மனை பட்டா - வேறு வீடு வைத்திருந்தால் பட்டாவை ரத்து செய்ய உத்தரவு

 இலவச வீட்டு மனை பட்டா பயனாளிகள், வேறு வீடு வைத்திருந்தால் பட்டாவை ரத்து செய்ய வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


வேறு ஏதேனும் இடங்கள் அல்லது வீடு இருந்தால் அரசு சார்பில் வழங்கப்பட்ட பட்டாவை ரத்து செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.


இலவச இடத்தில் வீடு கட்டியிருந்தால் மின் இணைப்பு மற்றும் குடிநீர் இணைப்பை துண்டிக்க வேண்டும்.


சிவகங்கையை சேர்ந்த சக்திவேல் என்பவர் தாக்கல் செய்த மனுவை விசாரித்த ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. இலவச வீட்டு மனை பட்டா திட்டத்தின் கீழ் பட்டா வழங்க ஆட்சியருக்கு உத்தரவிடுமாறு மனுதாரர் கோரிக்கை விடுத்தார்.