யானையின் மீது யோகா... தவறி விழுந்த பாபா

 யோகா செய்யும் போது பாபா ராம்தேவ் எதிர்பாராத விதமாக யானையின் மேலே இருந்து கீழே விழுந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.


உ.பி மதுராவில் அமைந்துள்ள ராமனரதியில் அமைந்துள்ள  குரு சரணன்  ஆசிரமத்திற்கு வந்த பாபா ராம்தேவ் அங்கிருந்த யானை மீது அமர்ந்து யோகா  செய்தார்.


அப்போது அவர் அங்கிருந்த மாணவர்களுக்கு யோகா பயிற்சி தருவதாக கூறி அவர் யானை மீது ஏறி யோகா செய்தார்.


சிறிது நேரத்தில், யானை தனது உடலை அசைத்ததால், பாபா ராம்தேவ் எதிர்பாராத விதமாக மேலே இருந்து கீழே விழுந்தார். இந்த, வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.


கீழே விழுந்து எழுந்த ராம்தேவ் புன்னகையுடன் வேகமாக நடக்கும் காட்சிகள் அந்த வீடியோவில் பதிவாகியுள்ளது. அவருக்கு இதில் காயங்கள் எதுவும் ஏற்படவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.


யானை அசைத்ததும் கீழே விழுந்து, அவர் எழுந்து விரையும் இந்த, வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.


மேலும் சில நாட்களுக்கு முன் யோகா குரு ராம் தேவ் சைக்கிள் ஓட்டிக் கொண்டு செல்லும்போது, சாலையில் விழுந்தார். இந்த வீடியோவும் வைரலானது குறிப்பிடத்தக்கது.