பரபரப்பான அரசியல் சூழலில் சூப்பர் ஸ்டார் புதிய கட்சி


சூப்பர் ஸ்டார் ரஜினியின் புதிய கட்சி அறிவிப்பு, அடுத்தாண்டு பிப்ரவரி மாதம் வெளியாகலாம் என தகவல்கள் கசியத்தொடங்கியுள்ளன.


தற்போது அ.இ.அ.தி.மு.க.,வில், முதல்வர் வேட்பாளருக்கு கடும் போட்டி ஏற்பட்டுள்ள நிலையில், இன்று, அதற்கான பெயர் அறிவிக்கப்பட உள்ளது.


இந்நிலையில், பலகாலமாக  தமிழக அரசியலில் மாற்றத்தை ஏற்படுத்துவார் என, நம்பப்படும் சூப்பர் ஸ்டார் ரஜினி, தன் அரசியல் கட்சியின் பெயர் மற்றும் முதல்வர் வேட்பாளரை, அடுத்தாண்டு பிப்ரவரியில் அறிவிக்க உள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகி உள்ளது.


தேர்தலுக்கு, மூன்று மாதத்திற்கு முன்னதாக அவர் கட்சியின் பெயரை அறிவிக்க, ரஜினி திட்டமிட்டுள்ளார். அதன்பின், ஒரே கட்டத்தில் முழுமூச்சாக தேர்தல் பணியில் ஈடுபடவும், அவர் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.