போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி, எல்லையில் தொடர் தாக்குதல்

 நம் அண்டை நாடான பாகிஸ்தான் அவ்வபோது போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி, எல்லையில் தொடர்ந்து அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகிறது.


அந்தவகையில், நேற்று முன்தினம் இரவு பாகிஸ்தான் ராணுவத்தினர் காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின்  கத்துவா மாவட்டத்தில் உள்ள ஹிராநகர் பகுதியில் குடியிருப்புகளைக் குறித்து வைத்து தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலுக்கு இந்திய ராணுவமும் தகுந்த பதிலடி கொடுத்துள்ளது. இருதரப்புக்கும் இடையிலான இந்த சண்டை அதிகாலை 5 மணி வரையிலும் நீடித்தது. இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பான  சேதமோ அல்லது உயிரிழப்போ ஏற்பட்டதாக எந்த தகவலும் தெரிவிக்கப்படவில்லை.