பெண் குழந்தையை காலால் நசுக்கி கொன்ற தந்தை


திருமணமாகி 5 வருடத்திற்கு பிறகு பிறந்த பெண் குழந்தையை காலால் நசுக்கி கொன்ற தந்தை.


ஹரியானா மாநிலத்தில் யமுனாநகரின் பாதி மஜ்ரா பகுதியில் உள்ள ஒரு வாடகை வீட்டில் வாசிக்க கூடிய தம்பதிகளாகிய நீரஜ் வர்ஷா தம்பதிகளுக்கு கடந்த 2015 ஆம் ஆண்டு திருமணமாகியுள்ளது.


திருமணமாகி 5 வருடங்களாகியும் இத்தம்பதிகளுக்கு குழந்தை கிடைக்கவில்லை. ஆனால், கடந்த வருடத்தில் இவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைத்துள்ளது.


கடந்த சில தினங்களுக்கு முன்பு இவர்களுக்கு அழகிய பெண் குழந்தையும் பிறந்துள்ளது. பெண் குழந்தை பிறந்ததால் வர்ஷாவின் கணவர் நீரஜ் மனமுடைந்துள்ளார்.


அடிக்கடி இதனால் தகராறும் செய்து வந்துள்ளார். இந்நிலையில், கடந்த திங்கள்கிழமை தூங்கிகொண்டிருந்த குழந்தைக்கு அருகில் வந்து அமர்ந்த நீரஜ் தனது காலால் குழந்தையின் முகத்தில் மூச்சுத்திணறும்படி மிதித்துள்ளார்.


இதனால் அக்குழந்தை இறந்துள்ளது. இதனை கண்டு அதிர்ந்த வர்ஷா தனது கணவர் மீது போலீசில் புகார் அளித்துள்ளார். இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 302 கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.