கீழடி அகழாய்வின் அறிக்கைகளை அரசு வெளியிடுவதில் தாமதம் ஏன்


கீழடி அகழாய்வின் 5 கட்ட அறிக்கைகளை அரசு வெளியிடுவதில் தாமதம் ஏன்? என்று  ராமதாஸ்  கேள்வி எழுப்பியுள்ளார்.

 

இது தொடர்பாக பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் ,

தமிழர் நாகரிகத்தின் தொன்மையையும், பெருமையையும் உலகத்திற்கு உணர்த்தவிருக்கும் கீழடி அகழாய்வுப் பணிகள் விரைவாக நடைபெற்று வரும் போதிலும், அவற்றின் முடிவுகள் குறித்த அறிக்கைகளை வெளியிடுவதில் செய்யப்படும் தாமதம் மிகவும் ஏமாற்றம் அளிக்கிறது.

 

இதுவரை 6 கட்ட அகழாய்வுப் பணிகள் நடைபெற்று முடிந்துள்ள நிலையில், ஒரு கட்ட அகழாய்வு அறிக்கை மட்டுமே வெளியிடப்பட்டுள்ளது.

 


 

உலகின் மூத்தக்குடி தமிழ்க்குடி என்பது ஆதாரங்களுடன் நிரூபிக்கப்பட வேண்டும் என்பது தமிழர்களின் கனவு, எதிர்பார்ப்பு, ஆவல், தாகம், தவம் அனைத்தும் ஆகும்.

 

அதை உணர்ந்து கீழடியில் நடத்தப்பட்ட முதல் 3 அகழாய்வுகளின் அறிக்கைகளை, இனியும் தாமதிக்காமல், விரைந்து வெளியிட மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேபோல், ஐந்தாம் கட்ட அகழாய்வு குறித்த அறிக்கையை உடனடியாகவும், ஆறாம் கட்ட அகழாய்வின் அறிக்கையை அடுத்த சில மாதங்களிலும் வெளியிட தமிழக அரசின் தொல்லியல் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.