பாளை மத்திய சிறையில் சிபிஐ அதிகாரி போல் நடித்த பெண்


பாளையங்கோட்டை மத்திய சிறை நுழைவாயிலில் நின்றிருந்த போலீசாரிடம் நேற்று மதியம் பெண் ஒருவர் தன்னை சிபிஐ அதிகாரி என அறிமுகப்படுத்தி கொண்டார்.


பெண்களுக்கு எதிரான பாலியல் புகார்களை விசாரித்து வருவதாகவும், சிறையிலுள்ள அதிமுக முன்னாள் எம்எல்ஏவை சந்தித்து விசாரணை நடத்த வேண்டும் என்றும் கூறியுள்ளார்.


இதையடுத்து சிறை காவலர்கள்  அடையாள அட்டையை வாங்கி பார்த்தனர். அது அது போலியானது என தெரிந்தது.


அவரிடம் தீவிரமாக வசாரித்ததில், நாகர்கோவிலைச் சேர்ந்த ரீட்டா (43) என்பதும்,த 6 ஆண்டுகளுக்கு முன்பு ஆந்திர மாநிலத்தில் பெண்களுக்கு எதிராக பாலியல் குற்றங்களில் ஈடுபட்டவர்களிடம் விசாரணை நடத்தும் குழுவில் பணியாற்றியதும் தெரிய வந்தது.


ஐதராபாத்தில் நடந்த  கார் விபத்தில் ரீட்டாவின் பின் தலையில் காயம் ஏற்பட்டதால் 30 சதவீதம் மனநிலை பாதிக்கப்பட்டதும் தெரிந்தது. இதையடுத்து உறவினர்களை வரவழைத்து ரீட்டாவை அனுப்பிவைத்தனர்.