ரிவர்சில் வந்த கார் மோதி டிரைவர் பலி


புளியந்தோப்பு நாச்சாரம்மன் லைன் தெருவை சேர்ந்த ஆட்டோ டிரைவர் ஆனந்த் (58), நேற்று நண்பர் சுரேசுடன் வீட்டின் வெளியே அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார்.


அப்போது, அங்கிருந்த காரை டிரைவர் ரிவர்ஸ் எடுத்தபோது, எதிர்பாராதவிதமாக ஆனந்த் மீது மோதியதில், உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே இறந்தார்.


இதை பார்த்த அக்கம் பக்கத்தினர், கார் டிரைவர் ஜாகீரை பிடித்து சரமாரியாக தாக்கினர். காரையும் அடித்து நொறுக்கினர். தகவலறிந்து வந்த போலீசார், அவரை மீட்டனர். மேலும் இதுபற்றி வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.