ருசியான நாஞ்சில் மீன் குழம்பு ரெசிபி

ருசியான நாஞ்சில் மீன் குழம்பு ரெசிபி சமைத்து எப்படி


 இன்றைய குமரி, அக்காலத்தில் ஆய்நாடு, நெங்கநாடு, படப்பநாடு, வள்ளுவநாடு, குறுநாடு, புறத்தாநாடு, நாஞ்சில்நாடு எனப் பல குறுநாடுகளாகப் பிரிந்து கிடந்தது.


விருந்தோம்பல் பண்பில் நாஞ்சில் மக்களுக்கு என்று ஒரு தனித்தன்மை உண்டு. அத்தைகைய சிறப்பை பெற்ற நாஞ்சில் நாட்டு மக்களின் முக்கிய உணவான நாஞ்சில் நாட்டு மீன் குழம்பு எப்படி செய்வது என்பதைப் பார்க்கலாம்.


மீன் அதிக அளவில் புரதச் சத்தினைக் கொண்டதாக உள்ளது, அனைவரும் சாப்பிட ஏற்ற மீனில் நாம் பல வகையான ரெசிப்பிகளை செய்து சாப்பிட்டு இருப்போம், அந்த வகையில் இப்போது நாஞ்சில் மீன் குழம்பு ரெசிப்பி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.தேவையானவை


மீன் (திருக்கை, வாளைமீன் தவிர) – அரை கிலோ


புளி - எலுமிச்சம் பழ அளவு


பச்சைமிளகாய் - 2


தேங்காய் – 1/2 மூடி


பெரிய வெங்காயம் – 1


தனியா - 3 ஸ்பூன்


காய்ந்த மிளகாய் - 10


பெருஞ்சீரகம் - 1 ஸ்பூன்


மிளகு - 1 ஸ்பூன்


வெந்தயம் - 1 ஸ்பூன்


கறிவேப்பிலை – தேவையான அளவு


எண்ணெய் - தேவையான அளவு


உப்பு - தேவையான அளவு


செய்முறை :


மீனை சுத்தம் செய்து தோலை நீக்கி விட்டு எடுத்து வைத்துக் கொள்ளவும். பச்சை மிளகாயை கீறி வைக்கவும்.  வெங்காயத்தை நீளவாக்கில் நறுக்கிக் கொள்ளவும். அடுத்து புளியை ஊறவைத்துக் கரைத்து கொள்ளவும். 


அடுத்து கறிவேப்பிலை, பச்சைமிளகாய் சேர்த்து கலந்து வைத்துக் கொள்ளவும். 


தேங்காயை துருவி வாணலியில் எண்ணெய் ஊற்றி தேங்காய் துருவல், வெங்காயம், மல்லி, காய்ந்த மிளகாய், மிளகு, பெருஞ்சீரகம் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து வறுத்துக் கொள்ளவும். 


அடுத்து இந்தப் பொருட்களை மிக்ஸியில் போட்டு தண்ணீர் தண்ணீர் சேர்த்து அரைக்கவும். 


 அடுத்து புளிக்கரைசல், உப்பு சேர்த்து கலந்து வாணலியில் எண்ணெய் ஊற்றி வெந்தயத்தை தாளித்து, கரைத்து வைத்துள்ள கலவையை ஊற்றி குழம்பைக் கொதிக்கவிடவும். 


 அடுத்து அதனுடன் மீன் சேர்த்து இறக்கினால் நாஞ்சில் மீன் குழம்பு ரெடி.


சுவையான நாஞ்சில் நாட்டு மீன் குழம்பு தயார். மீன்குழம்பை மண்சட்டியில் செய்து சாப்பிட்டால் இன்னும் கூடுதல் சுவையுடனும், தூக்கலான ருசியுடனும் இருக்கும்.


உங்களது வீட்டில் நாஞ்சில் நாட்டு மீன் குழம்பு  செய்து அனைவரையும் அசத்திடுங்கள்


இதுபோன்ற பல பயனுள்ள  தகவல்களுடன் மேலும் நமது  உண்மை   செய்திகள்  குழுவின் சமையல்  பயணம் தொடரும்.


வணக்கம் அன்புடன் கார்த்திகா