பெற்றோர்களே- உங்கள் குழந்தையின் ஆரோக்கியத்திற்கு முக்கியத்துவம்


குழந்தைகளின் ஆரோக்கியத்தில் அக்கறை உள்ள பெற்றோருக்கு சூப்பர் டிப்ஸ்.


பொதுவாக பெற்றோர்கள் குழந்தையின் ஆரோக்கியத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பதுண்டு. குழந்தைகளின் ஆரோக்கியத்தில் ஏதேனும் குறைப்பாடு இருப்பின் அதற்க்கு காரணம் சுத்தமின்மை தான்.


பிறந்த குழந்தை முதல் வளரும் நிலையில் உள்ள குழந்தைகள் வரை எளிதில் நோய்தொற்றுகளுக்கு ஆளாகி விடுவதால், பெற்றோர்கள் சில ஆரோக்கிய விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும்.


குழந்தைக்கு சீராக எடை அதிகரிக்கவில்லை என்றாலோ, அல்லது நன்றாக வளரவில்லை என்றாலோ, சில முக்கியமான கேள்விகள் கேட்கப்படவேண்டும்:


குழந்தை சாப்பிட மறுக்கிறதா? குழந்தைக்கு ஒரு குறிப்பிட்ட உணவு பிடிக்கவில்லை என்றால் மற்ற உணவுகள் தரப்படவேண்டும். மெதுவாக புதிய உணவுகளை சேர்க்க வேண்டும்.


குழந்தை எத்தனை முறை சாப்பிடுகிறது? – ஒரு குழந்தை ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் 3 அல்லது 5 முறை சாப்பிட வேண்டும். குறைபாடு உள்ள குழந்தைக்கு சாப்பிடும்போது அதிக உதவியும் நேரமும் தேவைப்படும்.


குழந்தைக்கு தேவையான அளவு உணவு கிடைக்கிறதா? குழந்தை உணவை சாப்பிட்டு விட்டு மீண்டும் கேட்டால், தரப்படவேண்டும்.


குழந்தையின் உணவில் மிகவும் குறைவான வளர்ச்சி தரும் அல்லது சக்தி தரும் பாகம் உள்ளதா? குழந்தைக்கு வளர்ச்சி தரும் உணவுகள், மாமிசம், மீன், முட்டை, பீன்ஸ், கொட்டைகள், தானியங்கள் மற்றும் பருப்புகள் ஆகும். சிறிதளவு எண்ணெய் சக்தி சேர்க்கும் சிவப்பு பனை எண்ணெய் அல்லது மற்ற வைட்டமின் மெருகேற்றிய சமையல் எண்ணெய்கள் சக்திக்கான நல்ல மூலப்பொருட்கள் ஆகும்.


வைட்டமின் – ஏ தாய்ப்பாலில் அதிகமாக உள்ளது. ஈரல், முட்டை, பால் சார்ந்த பண்டங்கள், பனை எண்ணெய், மஞ்சள் மற்றும் ஆரஞ்சு நிற பழங்கள் மற்றும் காய்கறிகள் மற்றும் பலவித பச்சைக்கீரைகள் ஆகியவை வைட்டமின் ஏ உள்ள மற்ற உணவுகள் ஆகும்.


தாய்ப்பாலிற்கான மாற்று உணவுகள் குழந்தைக்கு புட்டியில் தரப்படுகிறதா? குழந்தை ஆறு மாதத்திற்கும் சிறியதாக இருந்தால் தாய்ப்பால் மட்டுமே தருவது சிறந்தது. ஆறு மாதத்திலிருந்து 24 மாதம் வரை அதிக ஊட்டச்சத்துகளின் மூல பொருளாக விளங்கும் தாய்ப்பாலே சிறந்ததாக விளங்குகிறது. மற்ற பால் தருவதாக இருந்தால் அதை புட்டியில் தருவதை விட சுத்தமான, திறந்த கிண்ணத்தில் தரவேண்டும்.


தண்ணீர் பாதுகாப்பான இடத்திலிருந்து எடுக்கவேண்டும் மற்றும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும். சுத்தமான குடிதண்ணீரை சரியாக பராமரிக்கப்பட்ட, கட்டுபாடான, குளோரின் சேர்க்கப்பட்ட குழாயிலிருந்து எடுக்கவேண்டும்.


சுத்தமான தண்ணீரை ஆழ்குழாய் கிணறு, கைக்குழாய், பாதுகாப்பான ஏரி அல்லது கிணற்றிலிருந்து எடுக்கவேண்டும். குளம், ஓடை, கிணறு அல்லது தொட்டிகளிலிருந்து தண்ணீர் எடுத்தால் அதை கொதிக்கவைத்து பாதுகாக்கவேண்டும்.


உணவில் அதிக கவனம் எடுத்துக் கொள்ள வேண்டும். 6 மாத குழந்தைக்கு மேற்பட்டவர்களாக இருப்பின் சத்தான உணவுகளைக் கூழ், கஞ்சி வடிவில் கொடுங்கள்.


பற்கள் முளைத்து விட்ட குழந்தைகள், உடல் பலவீனமாக இருப்பவர்கள், பெண்கள், கர்ப்பிணிகள், தாய்ப்பால் கொடுப்பவர்கள் சத்தான உணவுகளைச் சாப்பிட வேண்டும்.



  • காய்கறிகள், பழங்கள் – ஒரு நாளைக்கு 4-5 முறை

  • கைக்குத்தல் அரிசி, தானியங்கள், உருளைக்கிழங்கு, பருப்பு – பயறு வகைகள் – வாரத்தில் 5-6 நாட்கள்

  • பசும்பால், தயிர், மோர், சீஸ், நெய் – வாரத்தில் 4-5 நாட்கள்

  • மீன், முட்டை, சிக்கன், மட்டன், இறால் – வாரத்தில் 2 நாட்கள்

  • நட்ஸ், உலர்பழங்கள், விதைகள் – வாரத்தில் 3 நாட்கள்



கை கழுவுதல்


ஆறு மாதத்திற்கு பிறகு, குழந்தை மற்ற உணவு சாப்பிட தொடங்குவதாலும், தவழ தொடங்குவதாலும் நோய் தாக்கும் அபாயம் அதிகரிக்கிறது.


குழந்தையின் கைகள் மற்றும் உணவு இரண்டையும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.


குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும் பட்சத்தில், எளிதில் நோய்வாய் படுவதற்கான வாய்ப்புகள் உள்ளது. எனவே, அவர்களுக்கு கை கழுவும் பழக்கத்தை கற்றுக் கொடுக்க வேண்டும்.



செல்லப்பிராணிகள் 


நாம் நமது வீடுகளில் செல்லப்பிராணிகளை விரும்பி வளர்ப்பதுண்டு. அனால், இந்த செல்ல பிராணிகள் நமது வீட்டில் உள்ள செல்ல குழந்தைகளின் ஆரோக்கியத்திற்கு ஆபத்தாகி விடக் கூடாது. எனவே செல்ல பிராணிகளை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். மேலும், தகுந்த பாதுகாப்பு மற்றும் தடுப்பூசிகளை செல்லப்பிராணிகளுக்கு அளிக்க வேண்டும்.


உபகரணங்கள்


நாம் குழந்தைகளுக்கு உணவு ஊட்ட மற்றும் மற்ற காரியங்களுக்காக பயன்படுத்தக் கூடிய உபகாரணங்களையும் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும்.


இதுபோன்ற பல பயனுள்ள  தகவல்களுடன் மேலும் நமது  உண்மை   செய்திகள்  குழுவின் உடல் நலம் பயணம் தொடரும்.


வணக்கம் அன்புடன்  மோகனா செல்வராஜ்