பீகார் அமைச்சர் கபில்தேவ் காமத் கொரோனாவுக்கு பலி

  


பீகார் அமைச்சர் கபில்தேவ் காமத் (வயது 70) கொரோனாத் தொற்றால் உயிரிழந்துள்ளார்.


உலக முழுவதும் அதிவேகமாக பரவி வரும் கொலைக்காரக் கொரோனா இந்தியாவிலும் தன் கோரத்தை காட்டி வருகிறது.


இக் கொடூரத் தொற்றால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கையும்,பலிகளின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.


இந்நிலையில் தான் பீகார் அமைச்சர் கபில்தேவ் காமத் (வயது 70) கொரோனாவுக்கு பலியாகியுள்ளார்.தொற்றால் பாதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.


மேலும்  பீகார் மாநிலத்தில் கொரோனாவுக்கு பலியான 2வது அமைச்சர் கபில்தேவ் காமத்  என்பது குறிப்பிடத்தக்கது.


நாடு முழுவதும் கொரோனாவால் 20 மக்கள் பிரதிநிதிகள் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.