முக்கியச் செய்திகள்.

 



நாளை நடை திறப்பு:


சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஐப்பசி மாத பூஜைக்காக நாளை நடை திறக்கப்படுகிறது. தினமும் 250 பக்தர்கள் மட்டுமே சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுகிறார்கள்.


கனமழை காரணமாக... ரெட் அலர்ட்:


கனமழை காரணமாக மும்பை, தானே உள்ளிட்ட பகுதிகளுக்கு இன்று ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.


6 மாதங்களுக்கு பின்... நாளை முதல்:


தமிழகத்தில் சுமார் 6 மாதங்களுக்கு பின், நாளை முதல் ஆம்னி பேருந்துகள் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்:


கூட்ட நெரிசலை தவிர்க்க பண்டிகை கால சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.


விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு:


சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் 2020-2021ஆம் கல்வியாண்டுக்கான 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.


உதவித்தொகையைப் பெற விண்ணப்பிக்கலாம்:


மத்திய அரசின் கல்வி உதவித்தொகையைப் பெற பல்கலைக்கழக மற்றும் கல்லூரி மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) தெரிவித்துள்ளது.


மத்திய அமைச்சரவை அறிவிப்பு:


தேசிய கல்விக்கொள்கையின் கீழ், பள்ளிக்கல்வி முறையை வலுப்படுத்த ஸ்டார்ஸ் திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.


5ஆம் கட்ட தளர்வுகள்:


மத்திய அரசு ஏற்கனவே அறிவித்த 5ஆம் கட்ட தளர்வுகளின்படி பள்ளிகள், திரையரங்குகள் மற்றும் பொழுதுபோக்கு பூங்காக்கள் இன்று திறக்கப்பட்டன. 



மாவட்டச் செய்திகள்



முட்டை கொள்முதல் விலை 25 காசுகள் குறைந்தது:


நாமக்கல்லில் முட்டை கொள்முதல் விலை 25 காசுகள் குறைந்து ரூ.5-க்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. முட்டை விலை உயர்ந்த நிலையில் விற்பனை மந்தமானதால் மீண்டும் விலை குறைந்து காணப்படுகிறது.


6 மாதங்களுக்கு பிறகு:


கரூர் மாவட்டத்தில் 6 மாதங்களுக்கு பிறகு 4 இடங்களில் உழவர் சந்தை திறக்கப்பட்டுள்ளது. 



விளையாட்டுச் செய்திகள்   : டெல்லி கேப்பிடல்ஸ் அணி வெற்றி:


ஐபிஎல் கிரிக்கெட் தொடரில், நேற்றைய போட்டியில் ராஜஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 13 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி கேப்பிடல்ஸ் அணி வெற்றிபெற்றது.