விஜய் அரசியல் கட்சி தொடங்குவதற்கு ஆதரவு தருகிறேன் - மாஃபா


விஜய் மக்கள் இயக்கம் அரசியல் கட்சியாக மாறும் என்று நடிகர் விஜயின் தந்தையும் இயக்குநருமான எஸ்.ஏ சந்திரசேகர் பரபரப்பு தெரிவித்தார்.


நடிகர் விஜய் அரசியலுக்கு வருவதை வரவேற்பதாக அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளர்.


மறைந்த முதல்வர் ஜெயலலிதா இருக்கையில் அதிமுகவுக்கு ஆதரவு தந்த விஜய் அரசியல் கட்சி தொடங்குவதற்கு ஆதரவு தருகிறேன் என அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் அவர்கள் தெரிவித்துள்ளார்.தமிழ் திரையுலகின் பிரபலமான இயக்குனரும் முன்னணி நடிகர் விஜய் அவர்களின் தந்தையும் ஆகிய எஸ் ஏ சந்திரசேகர் அவர்கள் நேற்று விஜய் மக்கள் இயக்கம் விரைவில் அரசியல் கட்சியாக மாறும் என்று கூறியிருந்தார்.

 

இது குறித்து பலரும் தங்களது கருத்துக்களையும், வரவேற்பையும் தெரிவித்திருந்தனர். இந்நிலையில், 1.28 கோடி மதிப்பில் 19 தெருக்களில் சாலை அமைக்கக்கூடிய பணி ஆவடி மாநகராட்சியில் நடைபெற்று வருகிறது.

 

இதனை பார்வையிட்ட தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் அவர்கள் அதன்பின் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

 

அப்போது பேசிய அவர், சாலை பணிகளை மழை காரணமாக விரைந்து முடிக்க வேண்டும் என கூறினார். அதன்பின் விஜய் மக்கள் இயக்கம் அரசியல் கட்சியாக மாறும் என்ற கருத்து குறித்து பேசிய அவர், ஜெயலலிதா இருக்கும் பொழுதே நடிகர் விஜய் அதிமுகவுக்கு நேரடியாக ஆதரவு தெரிவித்தவர்.

 

எனவே அவரது மக்கள் இயக்கம் அரசியல் கட்சியாக மாறும் என அவரது தந்தை அறிவித்துள்ளதை தான் வரவேற்பதாகவும் பாண்டியராஜன் அவர்கள் தெரிவித்துள்ளார்.


மேலும் அவர் 7.5% இடஒதுக்கீடு தொடர்பாக 5 அமைச்சர்கள் ஆளுநரை சந்திக்க உள்ளனர்.நல்ல முடிவு வரும் என எதிர்பார்ப்போம்.


இடஒதுக்கீட்டில் அதிமுகவுன் திமுக இணைந்து போராட தயாராக உள்ளது என்று கூறுவது தேவையற்ற ஒன்று என்று விமர்சித்துள்ளார்.