தான் சிகிச்சை அளித்த குழந்தை உயிரிந்தால், உறவினர்களின் டார்ச்சர் தாங்காமல் மன உளைச்சலில் தற்கொலை செய்துகொண்ட மருத்துவர்.
கேரள மாநிலத்தில் உள்ள கொல்லத்தில் உள்ள அனூப் ஆர்த்தோ மருத்துவமனையில் மருத்துவர் அனூப் கிருஷ்ணன் அவர்கள் தலைமையில் புதூரை சேர்ந்த அபியா என்னும் 7 வயது சிறுமிக்கு அறுவை சிகிச்சை நடந்துள்ளது.
இந்நிலையில் அறுவை சிகிச்சை நடந்த சிறிது நேரத்திலேயே சிறுமிக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் சிறுமியை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லுமாறு வலியுறுத்தியுள்ளனர்.
அரசு மருத்துவமனைக்கு சிறுமியை கொண்டு சென்ற பின்பு அங்கு சிறுமியை பரிசோதித்த மருத்துவர்கள் அச்சிறுமி ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.
இதனால் சிறுமியின் பெற்றோர் கடந்த சில தினங்களுக்கு முன்பு காவல் நிலையத்தில் அனூப் கிருஷ்ணன் மீது புகார் அளித்துள்ளனர்.
மேலும் மருத்துவர்கள் கவனக் குறைவு தான் சிறுமி உயிரிழந்ததற்கு காரணம் என உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும் சில அரசியல் பிரமுகர்களுடன் மருத்துவர் அனூப் கிருஷ்ணனை சிறுமியின் உறவினர்கள் தொடர்ந்து மிரட்டல் விடுத்து வந்துள்ளனர்.
இதனால், மனமுடைந்த மருத்துவர் வியாழக்கிழமை தனது கை நரம்பை அறுத்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.