இட்லி மஞ்சுரியன்

 


இட்லி மஞ்சுரியன்இட்லிகளை அளவுக்கு அதிகமாக சுட்டுவிட்டால், மீதமுள்ளவற்றை தூக்கிப் போடாமல், அதனை வைத்து இதுவரை உப்புமா தான் செய்து சாப்பிட்டிருப்போம்.

 

ஆனால் இப்போது அவற்றை குழந்தைகள் விரும்பி சாப்பிடும் வகையில் மஞ்சூரியன் போன்று செய்து கொடுக்கலாம். அந்த இட்லி மஞ்சூரியனை எப்படி செய்வதென்று பார்ப்போமா

தேவையான பொருட்கள் :பொருள் - அளவு


இட்லி 10
சோளமாவு 3 TSP
கடலை மாவு 2 TSP
சீரகப் பொடி2 TSP
மிளகாய்த்தூள் 2 TSP
இஞ்சி1 TSP (துருவியது)
பச்சை மிளகாய் 2


கரம் மசாலா தூள் - 1/2 டீஸ்பூன்

பு ண்டு 1 TSP (துருவியது)
உப்பு தேவையான அளவு 
எண்ணெய் தேவையான அளவு 
கேசரி கலர் சிறிதளவு 

செய்முறை :


🍪முதலில் இட்லியை வேண்டிய வடிவத்தில் நறுக்கிக் கொள்ளவும். (OR)

இட்லி மஞ்சுரியன் செய்வதற்கு முதலில் இட்லிகளை விரல் நீளத்துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.


🍪 நறுக்கி வைத்துள்ள இட்லி துண்டுகளுடன் கடலை மாவு, கரம் மசாலா தூள், சீரகப் பொடி, மிளகாய்த்தூள், இஞ்சி, கேசரி கலர், பச்சை மிளகாய், பு ண்டு, உப்பு, சிறிது தண்ணீர் ஆகியவற்றை சேர்த்து பிசைந்து கொள்ளவும்.


🍪 ஒரு வாணலியில் எண்ணெயை ஊற்றி  சுடானதும், அதில் கலந்து வைத்துள்ள இட்லித் துண்டுகளை சிறிது சிறிதாக போட்டு பொரித்தெடுக்கவும்


🍪 சுவையான இட்லி மஞ்சுரியன் தயார். 


குறிப்பு: எண்ணெய் நன்கு காய்ந்த பின்னரே, இட்லிகளை போட்டு பொரிக்க வேண்டும். இல்லையென்றால், எண்ணெயை இட்லி குடித்துவிடும். பின் அதை சாப்பிடவே முடியாத அளவில் ஆகிவிடும்.இதுபோன்ற பல பயனுள்ள  தகவல்களுடன் மேலும் நமது  உண்மை   செய்திகள்  குழுவின் சமையல்  பயணம் தொடரும்.


வணக்கம் அன்புடன் கார்த்திகா