சீதாப்பழத்தின் மருத்துவ குணங்கள்


இயற்கையில் வரமாக கொடுக்கப்பட்டுள்ள பழங்கள் நமது உடலுக்கு ஆரோக்கியத்தை கொடுப்பதுடன் பல்வேறு மருத்துவ குணங்களையும் கொண்டுள்ளது. சீதாப்பழத்தின் மருத்துவ குணங்கள் மற்றும் நன்மைகள் பற்றி இன்று அறியலாம்.
சீத்தாப்பழத்தின் மருத்துவ குணங்கள் சிறிய வகை மரமாக வளர்ந்தாலும் அட்டகாசமான சுவை கொண்ட சீத்தாப்பழம், விதைகள் மூலமாக எளிதில் வளரக்கூடிய தன்மை கொண்டது.

 

இதில் விட்டமின், புரதம், இரும்புச்சத்து ஆகியவை அதிகம் உள்ளதால் அதிக அளவு மருத்துவ குணங்களையும் கொண்டுள்ளது.

 

சீத்தாப்பழத்தை தொடர்ந்து உண்டு வருவதால் இதய நோய் வராமல் தடுத்து ரத்த ஓட்டத்தை சீர் செய்யலாம்.

 

இந்த சீதாப்பழத்தில் நினைவாற்றலை அதிகரிக்கும் தன்மை  உண்டு.
 

உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் சீதாப்பழத்தை கட்டாயம் பயன்படுத்தலாம்.

 

காச நோயின் ஆரம்ப நிலையை மாற்றக்கூடிய தன்மை கொண்ட மிக அட்டகாசமான சீத்தாப்பழம், உடல் உள்ளுறுப்புகளில் ஏற்படக்கூடிய புண்களை ஆற்றும் தன்மையும் கொண்டுள்ளது.

 

கோடை காலத்தில் ஏற்படக்கூடிய நாவறட்சி மற்றும் உடல் வெப்பத்தை தணித்து உடலுக்கு குளிர்ச்சியை தருகிறது.

 

வெந்தயத்துடன் சீதாப்பழத்தை சாப்பிட்டு வரும்பொழுது குடல்புண் ஆறி ஆரோக்கியமான குடல் உருவாகும்.

 


சீதாப்பழம் இரத்த விருத்தி செய்யும். சோகை நோயைக் குணப்படுத்தும். இப்பழத்தில் குளுக்கோஸ் கணிசமாக உள்ளதால் உடல் சோர்வை அகற்றி சுறுசுறுப்பை ஏற்படுத்தும்.

 

சீதாப் பழத்தில் ஏராளமான ஊட்டச்சத்துக்களும், கனிமச்சத்துக்களும் உள்ளதால் அது உடலுக்கு பல்வேறு நன்மைகளை வாரி வழங்கும்.

 

சீதாப் பழத்தில் உள்ள மெக்னீசியம் நமக்கு உடல்நல பயனை அளிக்கிறது. இதனால் மாரடைப்பு ஏற்படாமல் நம்மை அது பாதுகாக்கும்.

 

சீதாப் பழத்தில் வைட்டமின் பி வளமாக உள்ளது. இச்சத்து மூச்சுக்குழாய் அழற்சியைக் குறைக்கும் மற்றும் ஆஸ்துமா பிரச்சனை அண்டாமல்  பாதுகாக்கும்.

 

சீதாப் பழம் கண் பார்வையின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும். ஏனெனில் இதில் ரிபோஃப்ளேவின் மற்றும் வைட்டமின் சி அதிகம் உள்ளது.


 

அதிக அளவு நீர்ச் சத்து கொண்ட  சீத்தா பழம் மலச்சிக்களை நீக்குவதுடன், ஜீரணக் கோளாறுகளையும் போக்குகிறது. ரத்தத்தை சுத்திகரித்து ரத்த சோகையை போக்கும் திறன் கொண்டது.

 

உடல் சோர்வையும் போக்கி புத்துணர்வு தருகிறது. பித்த நோயாளிகள் சீத்தாப்பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வரும் போது பித்த நோய் மற்றும் மன நோய் ஆகியவை குணமடையும்.

 

திராட்சை பழ சாற்றுடன் சீதாப்பழத்தை கலந்து சாப்பிடும் பொழுது உடல் வலிமை பெறும், எலுமிச்சை சாறுடன் இப்பழத்தை கலந்து குடித்து வரும் பொழுது சிறுநீர் கடுப்பு நீங்கி குணம் அடையலாம்.

 


சீதாப்பழச்சாறு குடித்து வர, சரும வறட்சி நீங்கி இயல்பு நிலை பெறும். சீதாப்பழத்தில் கணிசமான அளவு வைட்டமின் ‘சி’ உள்ளதால், சளி  பிடிக்காது.

 

சீதாப் பழத்துடன் சிறிது மஞ்சள் தூள் சேர்த்து சாப்பிட்டு வர, கொலஸ்ட்ரால் சேராமல் காக்கும். சீதாப்பழத்துடன், குங்குமப்பூ சேர்த்துச் சாப்பிட்டால் நோய் எதிர்ப்புச் சக்தி உண்டாகும். 

 

சீதாப்பழத்துடன், சிறிது வெள்ளைப் பூண்டு வைத்து மைய்யமாக அரைத்து, தேமல் மீது பூசி வர, தேமல் மறையும்.

 

சீதாப்பழச்சாறுடன், திராட்சைப் பழச்சாறு கலந்து, பருகி வர, நரம்புகள் வலுப்படும்.சீதாப்பழ மரத்தின் இலைகள் மருத்துவ குணம் கொண்டவை. இலைகளில் இருந்து தயாரிக்கப்பட்ட கசாயம் வயிற்றுப் போக்கை கட்டுப்படுத்துகிறது. சர்க்கரை நோயாளிகளுக்கு சீதாப்பழ இலை அருமருந்து. சீதாப்பழ மரத்தின் வேர் கருச்சிதைவை கட்டுப்படுத்துகிறது.


* சீதாப்பழத்தை சாப்பிட்டால் செரிமானம் ஏற்படும்.
* சீதாப்பழ சதையோடு உப்பை கலந்து முகப்பரு மேல் தடவினால் முகப்பரு பழுத்து உடைந்து மறையும்.
* இலைகளை அரைத்து புண்கள் மேல் போட்டால் புண்கள் ஆறும்.
* விதைகளை பொடியாக்கி சம அளவு பொடியுடன் சிறு பயிறு மாவு கலந்து தலையில் தேய்த்து குளித்து வந்தால் முடி மிருதுவாகும்.
* சீதாப்பழம் காய்ச்சலை குணப்படுத்தும்
* சீதாப்பழம் விதைகளை பொடியாக்கி கடலை மாவு கலந்து எலுமிச்சை சாறில் குழைத்து தலையில் தேய்த்து ஊறிய பின்னர் குளித்து வந்தால் முடி உதிராது.
* சிறுவர்களுக்கு சீதாப்பழம் சாப்பிட்டால் எலும்பு உறுதியாகும்.
* சீதாப்பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் இதயம் பலப்படும்


 


இதுபோன்ற பல பயனுள்ள  தகவல்களுடன் மேலும் நமது  உண்மை   செய்திகள்  குழுவின் உடல் நலம் பயணம் தொடரும்.


வணக்கம் அன்புடன்  மோகனா செல்வராஜ்