டிக்-டாக் செயலியின் தடை நீக்கம்-பாகிஸ்தான்

 பாகிஸ்தான் அரசு டிக்-டாக் செயலியின் தடையை நீக்கியதாக தகவல் வெளியாகியுள்ளது.

சீன நிறுவனமான டிக்டாக் செயலியை இந்தியா,அமெரிக்கா போன்ற நாடுகள் பாதுக்காப்பிற்கு அச்சுறுத்தலாக இருப்பதாக தங்கள் நாட்டில் தடை செய்தது


இதனை தொடர்ந்து பாகிஸ்தானும் தனது நாட்டில் டிக்டாக் பயன்பாட்டிற்கு தடை விதித்தது.இந்நிலையில் தற்போது அத்தடையானது விலக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


இது குறித்து வெளியான தகவலின் படி:


பாகிஸ்தான் தொலைத்தொடர்பு ஆணையம் வெளியிட்டுள்ள செய்தியில் ஆபாசத்தையும் ஒழுக்கமின்மையையும் பரப்ப மீண்டும் ஈடுபடுகின்ற அனைத்து கணக்குகளும் நீக்கப்படும் என்று உறுதியை டிக்டாக் அளித்துள்ளது.


மேலும் ஒழுக்கக்கேடான பதிவுகளையெல்லாம் கட்டுப்படுத்துவதாக உறுதிய அளித்துள்ளதால் அதன் மீதான தடை நீக்கப்பட்டது என்று தெரிவித்துள்ளது.