மீன் வறுவல் பொடி வீட்டிலேயே தயாரிக்க ரெசிபி இதோ
மீன் வறுவலின் சுவையே அதன் மசாலா மிக்ஸிங்கில்தான் உள்ளது. எனவே அதன் சுவையை அசத்தலாக்கும் வகையில் வீட்டிலேயே எப்படி மீன் வறுவல் மசாலா பொடி தயாரிப்பது என்று பார்க்கலாம்.
என்னதான் மீன்குழம்பு வைத்து சாப்பிட்டாலும் அதை வறுவல் செய்து சாப்பிடுவது தனிச் சுவைதான்.
தேவையான பொருட்கள் :
மிளகு - 1/2 கப்
காய்ந்த மிளகாய் - 2 கப்
தனியா - 1 கப்
சோம்பு - 10 கிராம்
கிராம்பு - 10 கிராம்
வெந்தயம் - 5 கிராம்
மஞ்சள் தூள் - 1 tsp
சீரகம் - 1 /2 tsp
செய்முறை :
கடாய் வைத்து எண்ணெய் ஊற்றாமல் தனியாவை சூடேறு வகையில் வறுத்து எடுங்கள். அதேபோல் மிளகு, சீரகம் என அனைத்தையும் தனித்தனியே வறுத்து எடுத்துக்கொள்ளுங்கள். பின் அதை சூடு போக காற்றாடவிடுங்கள்.
மொத்தமாக போட்டு வறுக்காதீர்கள். ஒவ்வொன்றிற்கும் ஒவ்வொரு வெப்பம் பதம் தேவை என்பதால் மொத்தமாகப் போட்டால் ஏதாவதொன்று கருகிவிடலாம்.
சூடு தனிந்ததும் அனைத்தையும் மிக்ஸியில் போட்டு மைய அரைத்துக்கொள்ளுங்கள்.
பின் அதில் சூடு தணிந்ததும் காற்றுபுகாத டப்பாவில் போட்டு சேமித்து வையுங்கள்.
அவ்வளவுதான் மீன் மசாலா பொடி தயார்.
மீன் வறுக்க மிக்ஸிங் செய்யும்போது எலுமிச்சை சாறு பிழிந்துவிட்டு இந்த மசாலாவைக் கலந்து மீனில் தடவி ஊற வைத்து வறுத்தால் ருசியாக இருக்கும்.
வணக்கம் அன்புடன் கார்த்திகா