டெல்லி சிறைகளில் போதிய இடமில்லாததால் கைதிகளுக்கு ஜாமின்


இடைக்கால ஜாமீன் வழங்கப்பட்டு உள்ள விசாரணை கைதிகள்  3,337 பேருக்கு மேலும் 30 நாள் நீட்டிப்பு.


இந்தியா முழுவதும் கொரோனா பாதிப்புகள் அதிகரித்துள்ள சூழலில் கடந்த பல மாதங்களாக மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கி உள்ளது. 


வீட்டை விட்டு அச்சமின்றி வெளியே வர முடியாத நிலை காணப்படுகிறது. 


இந்த நிலையில், டெல்லியில் உள்ள சிறைச்சாலைகளில் கைதிகளின் எண்ணிக்கை தற்போது அதிகரித்து உள்ளது.


இது ஒருபுறம் இருக்க  தலைநகர் டெல்லியில்  குற்றங்கள் அதிகரித்திருக்கும் நிலையில் தற்போது  சிறைகளில் போதிய இடமில்லாத சூழலும் காணப்படுகிறது.