எனது மகளை மூளைச் சலவை செய்துள்ளார்கள் - சவுந்தர்யாவின் தந்தை பேட்டி


 


எனது மகளை மூளைச் சலவை செய்துள்ளார்கள் என்று பெண்ணின் தந்தை சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.


கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ பிரபு, அவரது குடும்பத்தினர் முன்னிலையில், கல்லூரி மாணவியை சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்டுள்ளார்.


இவருக்கு தியாகதுருகத்தில் உள்ள அவரது இல்லத்தில் எம்எல்ஏவின் பெற்றோர்கள் தலைமையில் எளிமையான முறையில் திருமணம் நடந்து முடிந்தது.


இதனிடையே , பெண்ணின் தந்தை சுவாமிநாதன், தனது மகள் சவுந்தர்யாவை கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ கடத்தி சென்றதாக புகார் அளித்தார்.


மேலும், மகள் சவுந்தர்யாவை மீட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தக் கோரி ஆட்கொணர்வு மனுவை சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். 


இந்த வழக்கு   சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.அப்பொழுது , கள்ளக்குறிச்சி அதிமுக எம்எல்ஏ பிரபு தனது மகள் சவுந்தர்யாவை கடத்தி சென்றதாக தந்தை சுவாமிநாதன் தொடர்ந்த ஆட்கொணர்வு வழக்கில் ,கணவர் பிரபுவுடன் செல்ல சவுந்தர்யாவுக்கு நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.மேலும் வழக்கினை முடித்து வைத்தது உயர்நீதிமன்றம்.


இந்நிலையில் இது குறித்து பெண்ணின் தந்தை சுவாமிநாதன் பேட்டியளித்தார்.


அப்பொழுது அவர் கூறுகையில்,எனது மகளை மூளைச் சலவை செய்து,மனதை கலைத்துள்ளார்கள் .எம்எல்ஏ பிரபு கட்டுப்பாட்டில்தான் எனது மகள் சவுந்தர்யா இருக்கிறார்.


அரைமணி நேரம் பேசியும் எனது முகத்தை மகள் பார்க்கவில்லை .பிரபு தாயாய், பிள்ளையாய் பழகிவிட்டு துரோகம்செய்துவிட்டார் என்றும் தெரிவித்துள்ளார்.