கொரோனா வைரஸ் மனித தோலின் மீது இருக்கும்

 கொரோனா வைரஸ் மனித தோலின் மீது 9 மணி நேரம் இருக்கும்.


உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்த வைரஸ் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும், உயிரிழப்போரின் எண்ணிக்கையும் நாளுக்குநாள் அதிகரித்த வண்ணம் உள்ளது.


இந்நிலையில், இந்த வைரஸை தடுக்க, தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், ஜப்பானில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், கொரோனா வைரஸ் மனித தோல் மீது  9மணி நேரம் இருக்கும் எனவும், சானிடைசர்களில் இருக்கும் எத்தனாலை பூசும் போது, 15 வினாடிகளில் இந்த கிருமிகள் அழிந்து விடும் என்றும், அடிக்கடி கை கழுவுவதால், இந்த அபாயத்தை தடுக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது