இழந்த மனிதவளத்தை ஈடு செய்ய என்ன செய்ய போகிறோம்


காலம் யாருக்காகவும் காத்திருக்காது என்பத்திற்கேற்ப, ஒவ்வொரு நாளும் நமக்கு ஒவ்வொரு புதிய பாடத்தை கற்று தந்துக் கொண்டு தான் இருக்கிறது என்பது நிதர்சனமான உண்மை.


கடந்த சமீப காலமாக நாம் பல முக்கியமான தலைவர்களை இழந்திருக்கிறோம். இந்த தலைவர்களின் மறைவு, பலரின் மனதை பாராமாக்கிவிட்டது என்று தான் சொல்ல வேண்டும்.


இந்நிலையில், கவிஞர் வைரமுத்து இதுகுறித்து தனது ட்வீட்டர் பக்கத்தில் ஒரு பதிவினை பதிவிட்டுள்ளார்.


அந்த பதிவில், "அப்துல்கலாம் – கலைஞர் – பேராசிரியர் – ஜெயலலிதா – ஜெயகாந்தன் – கே.பாலசந்தர் – எம்.எஸ்.விஸ்வநாதன் – எஸ்.பி.பி போன்ற பேராளுமைகளை அண்மைக் காலங்களில் இழந்திருக்கிறோம்.


இழந்த மனிதவளத்தை ஈடுசெய்ய என்ன செய்யப் போகிறோம்? வாழும் ஆளுமைகளைக் கொண்டாடுவோம்; வளரும் திறமைகளை வாழ்த்துவோம்." என பதிவிட்டுள்ளார்.