அட்டகாசமாக ஆட்டம் போடும் விவசாயிகள்- இணையத்தை கலக்கும் வீடியோ!


ஆச....மச்சான்! பாடலுக்கு அட்டகாசமாக ஆட்டம் போடும் விவசாயிகள்.


புதுக்கோட்டை மாவட்டம், காவிரி டெல்டா கடைமடை பகுதியில், குறுவை முடிந்து சம்பா சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.


இதனையடுத்து, ஆலங்குடி பகுதியில் உள்ள விவாசாயிகள், அங்கு முழுவீச்சில் விவசாய பணியில் ஈடுபட்டிருந்தனர்.


அப்போது அங்கு அருகில் இருந்த டிராக்டரில், ஆச மச்சான் பாடல் ஒலித்துக் கொண்டிருந்தது.


இந்த பாடலுக்கு அங்கு விவசாய பணியில் ஈடுபட்டிருந்த விவசாயிகள் நடனமாடிக் கொண்டே, நடவு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது