வாழும் கண்ணதாசன்

 



கண்ணதாசன்  (ஜூன் 24 1927 – அக்டோபர் 17 1981) புகழ் பெற்ற தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியரும், கவிஞரும் ஆவார்.


தமிழ் திரையுலகில் மட்டுமல்ல, தமிழ் மக்கள் மனதிலும் அழியா இடம்பிடித்தவர் பாடலாசிரியர் கண்ணதாசன்.


மறைந்து நான்கு தசாப்தங்கள் ஆகிவிட்டாலும் தன் தமிழால் வாழ்ந்து கொண்டிருக்கும் கவிப்பேரரசு கண்ணதாசனின் 39 ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று கடைபிடிக்கப்படுகிறது.


வரலாற்று கதைகளிலேயே மிகப்பெரிய தொடரான மகாபாரதத்தின் ஒட்டு மொத்த சாராம்சத்தையும் இரண்டே வரிகளில் ஒருவரால் விளக்கிச் சொல்லி விட முடியும் என்றால் அவர் பெயர் தான் கண்ணதாசன்.


நான்காயிரம் கவிதைகள், ஐயாயிரத்திற்கும் அதிகமான திரைப்பட பாடல்கள், தமிழக அரசின் அரசவைக் கவிஞர் என்ற கௌரவம், சாகித்திய அகாடமி விருது வென்ற படைப்பாளி என எண்ணற்ற சாதனைகளோடு இன்றும் தனது பாடல் வரிகளால் தமிழ் தமிழ் ரசிகர்களின் நெஞ்சத்தில் வாழ்ந்து வருகிறார் கண்ணதாசன்.


தமிழ் சினிமாவில் எம்ஜிஆர், சிவாஜி கணேசன் என்ற இருபெரும் நாயகர்கள் உருவாக கண்ணதாசனின் வரிகள் இன்றியமையாதது. எம்ஜிஆருக்கு நாயகன் துதிபாடும் பாடல்களை எழுதி புகழ் சேர்த்தது போலவே நடிகர் சிவாஜி கணேசனுக்கு பல தத்துவ பாடல்களை எழுதி சிவாஜிகணேசனின் நடிப்புக்கு தீனி போட்டவர் கண்ணதாசன்.


காட்டிற்கு ராஜா சிங்கம் என்றால் கவிதைக்கு ராஜா கண்ணதாசன் என்று தமிழக முன்னாள் முதலமைச்சர் காமராஜர் கண்ணதாசனை புகழும் அளவிற்கு கண்ணதாசனின் புகழ் தமிழ் திரை உலகம் கடந்து தமிழக அரசியலிலும் பிரதிபலித்தது.


நம் வாழ்க்கை என்பது ஒரு பொம்மலாட்டம் போன்றது. ஆங்கிலத்தில் சொல்ல வேண்டுமெனில் “IT’S JUST A PUPPET SHOW” .


கண்ணுக்குத் தெரியாத ஒரு மெல்லிய கயிறால் நாம் இயங்குகிறோம். அதை ஆட்டுவிப்பவன் மேலிருந்து இயக்குகிறான். மெல்லிய கயிறால் ஆட்டுவிக்கும் அந்த சக்தியை அவரவர் அவரவர் இஷ்டத்திற்கு வெவ்வேறு பெயரைக் கொண்டு அழைக்கின்றனர்.


சிலர் அல்லாஹ் என்கின்றனர்.
சிலர் கண்ணா என்று விளிக்கின்றனர்
இன்னும் சிலர் நந்தலாலா என்று அழைக்கின்றனர்.


“உனக்கென்ன மேலே நின்றாய் ஓ நந்தலாலா!!” என்று பாடலைத் தொடங்கும் கவிஞர் கண்ணதாசன்


‘கால் கொண்டு ஆடும் பிள்ளை நூல் கொண்டு ஆடும் பொம்மை
உன் கையில் அந்த நூலா நீ சொல்லு நந்தலாலா”


என குணங்குடியாரின் பொம்மலாட்ட தத்துவத்தை வருணிக்கிறார்


இரவல் தந்தவன் கேட்கின்றான் – அதை
இல்லையென்றால் அவன் விடுவானா?


“தெய்வம் என்றால் அது தெய்வம் – அது
சிலை என்றால் வெறும் சிலை தான்”


கவிஞர் கண்ணதாசன் எப்படி திருமூலர் கருத்துக்கள் முதல் ஷேக்ஸ்பியர், ஷெல்லி கருத்துக்கள் வரை  இரண்டிரண்டு வரிகளில், உயிரைக் குடிக்கும் வீரியம் கொண்ட சயனைடு வேதிப்பொருளை சிறிய குப்பிக்குள் அடைத்து வைப்பதுபோல், வீரியமிக்க கருத்துக்களை Auto Compress செய்து எப்படி Word Format-ல் அடக்கி வைத்தார் என்பது மில்லியன்  கேள்வி 


30 ஆண்டுகள் திரைத்துறையை முற்றுமுழுதாக ஆளுமை செய்தார் கண்ணதாசன். 


கதை, வசனம், தயாரிப்பு என சகல துறைகளிலும் இயங்கினார்  இசையமைப்பாளர்கள் எல்லாம் தங்கள் இசையில் அவருடைய பாடல் இடம் பெறுவதை பெருமையாகக் கருதினர். 


மூன்றாம் பிறை திரைப்படத்தில் இடம்பிடித்த கண்ணே கலைமானே என்ற தாலாட்டு பாடலுடன் தமிழக மக்களை உறங்க வைத்துவிட்டு கண்ணதாசன் நடைபெற்று இன்றுடன் 39 ஆண்டுகள் நிறைவடைந்து விட்டது. ஆனாலும் தன் பாடல்களால் இன்றும் ரசிகர்களின் நெஞ்சத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறார் கண்ணதாசன்.


 


திரையிசைப் பாடல்கள்
கண்ணதாசன் எழுதிய திரைப்படப் பாடல்கள் ஐந்துதொகுதிகள்


வசனம் எழுதிய திரைப்படங்கள்
நாடோடி மன்னன் (1958)


கதை, வசனம் எழுதிய திரைப்படங்கள்
மதுரை வீரன் 1956
நானே ராஜா 1956
ராஜா தேசிங்கு
மகாதேவி|(1957)
மாலையிட்ட மங்கை(1958)
கருப்புப் பணம்(1964)
தெனாலி ராமன்(1957)
தெய்வத் திருமணங்கள்
மன்னாதி மன்னன்(1960)
திருடாதே ``(1961)
ராணி சம்யுக்தா ``(1962)
இல்லற ஜோதி


கண்ணதாசன் பிற்காலத்தில் இந்து மதத்தில் பற்றுடையவரானார். 


சமயம்



  1. அர்த்தமுள்ள இத்து மதம் 1

  2. அர்த்தமுள்ள இந்து மதம் 2 :

  3. அர்த்தமுள்ள இந்து மதம் 3 :

  4. அர்த்தமுள்ள இந்து மதம் 4 : துன்பங்களிலிருந்து விடுதலை

  5. அர்த்தமுள்ள இந்து மதம் 5 : ஞானம் பிறந்த கதை

  6. அர்த்தமுள்ள இந்து மதம் 6 : நெஞ்சுக்கு நிம்மதி

  7. அர்த்தமுள்ள இந்து மதம் 7 : சுகமான சிந்தனைகள்

  8. அர்த்தமுள்ள இந்து மதம் 8 : போகம் ரோகம் யோகம்

  9. அர்த்தமுள்ள இந்து மதம் 9 : ஞானத்தைத்தேடி

  10. அர்த்தமுள்ள இந்து மதம்10 : உன்னையே நீ அறிவாய்


மணிமண்டபம்:


தமிழ்நாடு அரசு கண்ணதாசன் நினைவைப் போற்றும் வகையில் சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் புதிய பேருந்து நிலையம் அருகில் கவியரசு கண்ணதாசன் மணிமண்டபம்அமைத்துள்ளது.


84 இலட்ச ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட இம்மணிமண்டபம் 1981ல் அப்போதைய முதல்வர் எம்.ஜி.ஆர் அவர்களால் அறிவிக்கப்பட்டு, 1990ல் முதல்வர் கலைஞர் கருணாநிதி அவர்களால் அடிக்கல் நாட்டப்பட்டு, 1992ல் முதல்வர் செல்வி. ஜெயலலிதா அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.


இரண்டு தளங்களைக் கொண்ட இம்மணிமண்டபத்தில் கவியரசு கண்ணதாசன் மார்பளவு சிலை அமைக்கப்பட்டுள்ளது. மேல்தளத்தில் அரங்கமும், கீழ்தளத்தில் 2400 நூல்களுடன் ஒரு நூலகமும் இயங்கி வருகின்றது. கவியரசு கண்ணதாசன் அவர்களின் வாழ்க்கை வரலாறு தொடர்பான புகைப்படங்கள் கண்காட்சியாக வைக்கப்பட்டுள்ளது


39 ஆண்டுகள் கடந்தும் கண்ணதாசன் இன்னும் நம் மத்தியில் என்றென்றும் வாழ்ந்து கொண்டிருப்பவர் அவர்.



சிறு துளி  தான்


அன்புடன் மோகனா செல்வராஜ்