தோல்விகள் துரத்திய போதும் துவளாத தோனி

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் 200 போட்டிகளில் விளையாடி தோனி புதிய சாதனைப் படைத்துள்ளார்.


ஐபிஎல் தொடரில் 200 போட்டிகளில் விளையாடிய முதல் வீரர் என்ற பெருமைக்கு மகேந்திரசிங் தோனி சொந்தமாக்கியுள்ளார்.


நடப்பாண்டு ஐபிஎல் போட்டியானது அபுதாபியில் நடைபெற்று வருகிறது. தோனி தலைமையில் சென்னை அணி களமிரங்கி விளையாடி வருகிறது.


கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் சென்னை அணிக்காக ஐபிஎல் ஆடி வரும் தோனி  2 ஆண்டுகள் மட்டும் புனே அணிக்காக விளையாடி வந்தார்,


ஐபிஎல் வரலாற்றில் வெற்றி கேப்டனாக தோனி வலம் வந்ததை மறுப்பதிற்கு இல்லை ஆனால் நடப்பாண்டில் சற்று  சறுக்கல்களை சென்னை சந்தித்து வருகிறது என்பதனையும் மறுப்பதற்கு இல்லை.


தோல்விகளால் துவண்ட போதிலும் தோனி சாதனைகளை சாதித்தே வருகிறார். அதன்படி ஐபிஎல் தொடரில் 200 போட்டிகளில் விளையாடிய முதல் வீரர் என்ற சாதனையை தோனி படைத்துள்ளார்.