செய்திகள்


 


ரகசியமாகப் பணம் குவித்த இந்தியர்களின் இரண்டாவது பட்டியலை அனுப்பியது ஸ்விஸ் வங்கி..


---------------------------------


திருப்பதி ஏழுமலையான் கோவிலில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சாமி தரிசனம் செய்தார். ஓ.பி.எஸ் தலைமையில் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, எம்.சி.சம்பத் ஆகியோரும் வழிபட்டனர்.


------------------------------


சபரிமலை ஐயப்பன் கோயிலில் துலாம் மாத பூஜைக்காக பக்தர்களுக்கான முன்பதிவு இன்று முதல் தொடங்குகிறது. கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாள்தோறும் 250 பக்தர்களை மட்டுமே தரிசனத்திற்கு அனுமதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.


-------------------------------


நாட்டின் வளர்ச்சிக்கு தடைக்கல்லாக இருப்பது ஊழல்தான் என்று உயர்நீதிமன்ற நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் கருத்து தெரிவித்துள்ளார். ஊழலுக்கு நீதித்துறையும் விலக்கல்ல, நீதித்துறையில் ஊழல் இருப்பதை சகிக்க முடியவில்லை என்று நீதிபதி தெரிவித்துள்ளார்.


------------------------------------


சிங்காநல்லூர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே.சி.கருணாகரன் உடல்நலக்குறைவால் காலமானார். 23 ஆண்டு காலம் மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினராக பதவி வகித்தவர் கே.சி.கருணாகரன். காலை 9 மணி வரை உப்பிலியபாளையத்தில் உள்ள வீட்டில் அவரது உடல் அஞ்சலிக்காக வைக்கப்படுகிறது.


-------------------------


மறைந்த பாடகர் எஸ் பி பாலசுப்ரமணியம் ஆன்மா சாந்தியடைய வேண்டி திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கலெக்டர், எஸ்பி மற்றும் திரையிசை பின்னணி பாடகர்கள் மோட்ச தீபம் ஏற்றி வழிபட்டனர். நிகழ்ச்சியில் எஸ்பிபியின் சகோதரி எஸ்பி ஷைலஜா, கலெக்டர் கந்தசாமி, எஸ்பி., எஸ்.அரவிந்த் பாடகர் மனோ, பாடகி அனுராதா ஸ்ரீராம், நடிகர் மயில்சாமி உள்ளிட்ட திரை இசை கலைஞர்கள் கலந்து கொண்டனர்.