சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் - இந்திய ரயில்வே


 


டெல்லியில், நவராத்திரி பண்டிகையை முன்னிட்டு 196 ஜோடி சிறப்பு ரயில்கள் இயக்குவதற்காக ரயில்வே அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.


மேலும், 39 ஜோடி ஏசி சிறப்பு ரயில்களின் சேவைகளை மீண்டும் தொடங்குவதாக ரயில்வே அறிவித்த சில நாட்களுக்குப் பிறகு இந்த அறிவிப்பு வந்துள்ளது.


திருவிழா சிறப்பு ரயில்களில் 392 (196 ஜோடிகள்) வருகின்ற அக்டோபர் 20 முதல் நவம்பர் 30 வரை இயக்கப்படும். இந்த சேவைகளுக்கு பொருந்தும் கட்டணம் சிறப்பு ரயில்களுக்கு பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.