வாணியாறு அணையின் கரையோரம் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

 தருமபுரி மாவட்டத்தின் பாப்பிரெட்டிப்பட்டி வட்டத்தில் சேர்வராயன் மலை அடிவாரத்தில் வாணியாறு அணை உள்ளது. தற்போது, இந்த அணையின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து நிரம்பும் நிலையில் உள்ளத்து.


இந்நிலையில், கரையோரம் மற்றும் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு அம்மாவட்ட ஆட்சியர் மலர்விழி வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளார்.