துருக்கியில் அதிசக்திவாய்ந்த நிலநடுக்கம்

 



துருக்கி நாட்டில் ஏற்பட்ட அதிசக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் அடுக்குமாடி கட்டடம் இடிந்து விழும் வீடியோ, இணையத்தில் வைரலாகி வருகிறது.


துருக்கி நாட்டில் உள்ள "ஏகன்" தீவு பகுதிகளில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் அதிர்ந்து போன மக்கள், தாங்கள் இருக்குமிடத்தை விட்டு வெளியேறினார்கள். இந்த நிலநடுக்கத்தின் ரிக்டர் அளவு 7.0 ஆக இருந்ததாகவும், 14 கிலோமீட்டர் சுற்றுவட்டாரத்தில் இதன் தாக்கம் இருந்ததாகவும் கூறப்படுகிறது.


இந்த நிலநடுக்க தாக்கத்தால், அப்பகுதி குடியிருப்பு மக்கள் வசிக்கும் அடுக்கு மாடி கட்டடம் இடிந்து விழுந்தது. இந்த விபத்தில் பலர் உயிரிழந்திருக்கலாம் என் அஞ்சப்படுகிறது. அதுதொடர்பான விடியோக்கள், சமூகவலைத்தளத்தில் அதிகளவில் பரவிவருகிறது. மேலும், கிழக்கு ஏஜியன் கடல் தீவான சமோஸில் சிறியளவில் சுனாமி ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியானது.