தே.ஜ., கூட்டணியில் ஜெகன் மோகன் கட்சி இணைகிறதா


ஆந்திராவில், முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான, ஒய்.எஸ்.ஆர்., காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது.


கடந்த மாதம் டில்லி சென்ற, முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி, மத்திய உள்துறை அமைச்சரும், பா.ஜ., மூத்த தலைவருமான அமித் ஷாவை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.


'இது மரியாதை நிமித்தமான சந்திப்பு' என கூறப்பட்டாலும், தே. ஜ., கூட்டணியில் இணைவதற்கு, ஒய்.எஸ்.ஆர்., காங்., முயற்சிப்பதாக, அரசியல் வட்டாரத்தில் பேசப்பட்டது.


இந்நிலையில், டில்லி சென்ற ஜெகன்மோகன் ரெட்டி, பிரதமர் மோடியை சந்தித்து பேசினார்.


இதனால், தே.ஜ., கூட்டணியில், ஓய்.எஸ்.ஆர்., காங்., இணைவது உறுதி என பேச்சு எழுந்துள்ளது. இது குறித்து, ஒய்.எஸ்.ஆர்., காங்., மூத்த தலைவர்கள் கூறியதாவது:'ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கினால் மட்டுமே, தே. ஜ., கூட்டணியில் சேருவோம்' என, கடந்த தேர்தலுக்கு முன், ஜெகன்மோகன் ரெட்டி நிபந்தனை விதித்தார். அந்த நிபந்தனையை நிறைவேற்றாமல், தே.ஜ., கூட்டணியில் சேர்ந்தால், அது, ஆந்திர மக்களுக்கு செய்யும் துரோகமாகும்.