அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளுடன் ஆலோசனை -தமிழக தலைமை தேர்தல்

 நவம்பர் 3-ஆம் தேதி அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன் ஆலோசனை கூட்டம் நடைபெறவுள்ளது. 


தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இன்னும் சில மாதங்களே உள்ளது. இதற்காக தமிழகத்தில் உள்ள கட்சிகள் தயாராகி வருகின்றது.தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சிகள் நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டும் ,கட்சி பொறுப்புகள் குறித்த அறிவிப்பும் அறிவித்து வருகின்றன.


எனவே 2021-ஆம் ஆண்டு ஜனவரி 20-ஆம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் என்று தமிழக தேர்தல் ஆணையம் தெரிவித்தது.இந்தாண்டு நவம்பர் 16-ஆம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.


இந்நிலையில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடுவது குறித்து நவம்பர் 3-ஆம் தேதி அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன் தலைமைச் செயலகத்தில் ஆலோசனை கூட்டம் நடத்தப்படும் என்று  தமிழக தலைமை தேர்தல் ஆணையர் சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.