ஆரஞ்சு பழத்தில் உள்ள ஆரோக்கிய நன்மைகளை

 



இயற்கையில் கொடுக்கப்பட்டுள்ள எல்லா பழங்களுமே நமக்கு வரமாக தான் அமைந்துள்ளது. அதிலும் ஆரஞ்சு பழத்தில் எக்கச்சக்கமான நன்மைகள் உள்ளன. 


பழங்களில் பல வகைகள் இருந்தாலும் ஒரு சில பழங்கள் மட்டும் உலகளவில் மிகவும் பிரசித்தி பெற்று விளங்குகின்றன. அப்படியான ஒரு பழம் தான் “ஆரஞ்சு” பழம்.

 

இப்பழத்தை தமிழில்  கமலா பழம் என்றழைக்கின்றனர். ஆசிய கண்டதை சார்ந்த இந்த பழம் தற்போது உலகம் முழுவதும் உள்ள மக்கள் பயிரிட்டு வளர்த்து ஆரஞ்சு பழங்களை சாப்பிடுகின்றனர்.

 

இந்த ஆரஞ்சு பழங்களை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் என்ன என்பதை இங்கு தெரிந்து கொள்ளலாம்.

 

சிட்ரஸ் பழங்களில் ஒன்றான ஆரஞ்சுப் பழத்தின் முழுமையான நன்மைகளைப் பற்றி பலர் அறிந்திருக்க வாய்ப்பில்லை.

 

அனைவருக்கும் தெரிந்த ஒரு நன்மையென்றால், அதில் வைட்டமின் சி அதிகம் நிறைந்திருப்பதால், அதனை அதிகம் சாப்பிட்டால், சருமம் நன்கு பொலிவுடன் இருக்கும் என்பது மட்டும் தான்.

 

ஆனால், ஆரஞ்சுப் பழத்தில் வைட்டமின் சி சத்து மட்டுமின்றி, கால்சியம், பொட்டாசியம், நார்ச்சத்து, வைட்டமின் ஏ மற்றும் பீட்டா கரோட்டீன் போன்ற பல சத்துக்கள் அடங்கியுள்ளன. மேலும் ஆரஞ்சு பழத்தில் கலோரிகள் குறைவாக இருப்பதால், இதனை உடல் எடையை குறைக்க நினைப்போர் தினமும் டயட்டில் சேர்த்து வந்தால், நல்ல பலன் கிடைக்கும்.

 

அதுமட்டுமல்லாமல் இந்த ஆரஞ்சுப் பழம் சாப்பிடுவதால் நோயெதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கும். குறிப்பாக ஆரஞ்சுப் பழத்தை ஆண்கள் அதிகம் சாப்பிட வேண்டும்.

 

தொடர்ச்சியாக சாப்பிட்டு வருவதால் ஆரஞ்சு பழத்தின் மூலம் ஆண்களுக்கு விந்தணுக்கள் புதிதாகவும் ஆரோக்கியமாகவும் உருவாக வழிவகை செய்கிறது. இந்த பழத்தில் உள்ள ஊட்டச்சத்து விந்தணுக்களை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள உதவுவதாக பல்வேறு மருத்துவ ஆய்வுகளில் நிரூபிக்கப்பட்டுள்ளது.

 

மேலும், மலட்டுத்தன்மையை நீக்கி ஆரோக்கியமாக குழந்தை பிறக்கவும் இது வழிவகை செய்கிறது. மேலும் இதயநோய் உள்ளவர்கள் பழங்கள் காய்கறிகளை அதிகம் எடுத்துக்கொள்ளவேண்டும் என்று மருத்துவர்கள் பரிந்துரைப்பது வழக்கம்.

 

அதிலும் ஆரஞ்சு பழங்களில் பொட்டாசியம் சத்து அதிகம் இருப்பதால் இதை அடிக்கடி சாப்பிடுபவர்களுக்கு இதயத்திற்கு இரத்தத்தை கொண்டு செல்லும் நரம்புகள் இறுக்கம் ஏற்படுவதைத் தடுத்து, மாரடைப்பு வருவதற்கான வாய்ப்புகள் இல்லாமல் போகிறது.

 

இப்போது அந்த ஆரஞ்சுப் பழத்தை சாப்பிடுவதால், வேறு என்ன நன்மைகளைப் பெறலாம் என்பது கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து தெரிந்து, இனிமேல் ஆரஞ்சு பழத்தை தினமும் சாப்பிட்டு வாருங்கள்.

 

வாய் துர்நாற்றம் மற்றும் ஈறுகள், பற்கள் ஆரோக்கியமாக இருப்பதற்கும் பல் சொத்தை நீங்கி பல் கூச்சம் மறைவதற்கும் ஆரஞ்சு பழ சாறு பிழிந்து தினமும் காலை மற்றும் மதிய வேளையில் அருந்தி வருவது மிகவும் நல்லது.

 

பொட்டாசியம், கால்சியம், வைட்டமின் சி மற்றும் ஏ சத்துக்கள் அதிகமிருப்பதால் ஆரஞ்சு பழத்தில் உடலுக்குத் தேவையான அனைத்து சத்துக்களும் காணப்படுவதால்,கண் பார்வையை அதிகரிக்க உதவுகிறது. வைட்டமின் ஏ சத்து இதில் அதிகம் நிறைந்திருப்பதால் மாலைக்கண் நோய் கண்பார்வை மங்குதல் ஆகியவற்றை நீக்கி கண்ணை தெளிவாக வைத்திருக்க உதவுகிறது.

 


உடலில் எலும்புகள் வாழ்நாள் இறுதி வரை வலுவாக இருக்கும் வகையில் நாம் பார்த்துக்கொள்ள வேண்டும். இதற்கு பொட்டாசியம், கால்சியம் போன்ற சத்துகள் அதிகம் நிறைந்த உணவுகளை சாப்பிடவேண்டியது அவசியமாகும்.

 

ஆரஞ்சு பழத்தில் கால்சியம் மற்றும் பொட்டாசியம் சத்துக்கள் அதிகம் உள்ளது. இதை சாப்பிடுபவர்களுக்கு எலும்புகள், பற்கள் போன்றவை உறுதியாகிறது. “ஆஸ்டியோபொராஸிஸ்” எனப்படும் எலும்பு சார்ந்த நோய் ஏற்படாமல் தடுக்கிறது.


 


ஆரஞ்சுப் பழத்தில் கரையக்கூடிய நார்ச்சத்தானது அதிகம் நிறைந்திருப்பதால், அவை உடலில் உள்ள கொலஸ்ட்ராலின் அளவை குறைக்கும்.

 


ஆஞ்சில் பொட்டாசியம் என்னும் கனிமச்சத்து நிறைந்துள்ளது. இது இதயத்தை சீராக இயக்கக்கூடிய ஒரு பொருள். மேலும் உடலில் எப்போது பொட்டாசியம் சத்துக் குறைகிறதோ, அப்போது தான் இதயத்தில் பிரச்சனை ஏற்பட ஆரம்பிக்கிறது. எனவே தினமும் ஒரு ஆரஞ்சு பழத்தை சாப்பிடுவது நல்லது.

 

ஆரஞ்சு பழத்தில் உள்ள அதிக அளவு நார்சத்து உங்கள் இரத்தத்தில் உள்ள தேவையற்ற சர்க்கரையினை குறைக்க உதவுகின்றது.எனவே இரத்த சர்க்கரையின் அளவினை கட்டுக்குள் வைக்க தினமும் ஆரஞ்சு பழத்தினை உண்டு வாருங்கள்.

 

ரத்த அழுத்தத்தை குறைத்து சீராக வைத்திருக்க உதவுகிறது, பக்கவாத நோய்கள் தடுக்கிறது. கால்சியம் அதிகம் இருப்பதால் சிறுநீரக கற்கள் மறைய உதவுகிறது, அதிக அளவில் உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை கொடுப்பதுடன் உடல் கோடை காலங்களில் ஏற்படக்கூடிய உஷ்ணத்தால் வயிற்று வலி மற்றும் கட்டிகள் தோன்றுவதையும் தடுத்து, உடலை குளிர்ச்சியாக வைத்திருக்க உதவுகிறது.

ஆரஞ்சு பழத்தில் லெமோனாய்டுகள் என்னும் புற்றுநோயை எதிர்த்துப் போராடும் பொருள் அதிகம் நிறைந்துள்ளது. எனவே இந்த பழத்தை சாப்பிட்டால், பல வகையான புற்றுநோய்கள் வருவதை தடுக்கலாம்.


மலசிக்கல் என்பது அனைவரும் சந்திக்கும் முக்கியமான பிரச்சினைகளில் ஒன்று ஆகும். அதிலும் ஆரஞ்சு பழத்தில் அதிக அளவு நார்ச்சத்துக்கள் நிறைந்துள்ளதால் அவை உங்களுக்கு மலசிக்கல் ஏற்படாமல் தடுக்க உதவும்.


மேலும் உங்கள் குடல் ஆரோக்கியத்தினை மேம்படுத்த உதவும்.


ஆரஞ்சு பழத்தில் அதிக அளவு வைட்டமின் சி நிறைந்துள்ளது. இது உங்களுக்கு முடி கொட்டுதலை தடுத்து முடி வளர வழி வகுக்கும்.


எனவே இதனை ஆரோக்கியம் நிறைந்த ஆரஞ்சு பழத்தினை தினமும் உட்கொண்டு வாருங்கள் நண்பர்களே.


இவ்வளவு பயன்களை கொண்ட இந்த ஆரஞ்சு பழம் இயற்கை நமக்கு கொடுத்துள்ள வரம். இந்த பழங்கள் கிடைக்கும் பொழுது நிச்சயம் வாங்கி உண்ணுங்கள் பயன்பெறுங்கள்.



இதுபோன்ற பல பயனுள்ள  தகவல்களுடன் மேலும் நமது  உண்மை   செய்திகள்  குழுவின் பயணம் தொடரும்.


நன்றி அதிதி


.