கர்ப்பிணி பெண்ணை கொன்று ஃபிரிட்ஜில் வைத்திருந்த முன்னாள் காதலன் கைது செய்யப்பட்டுள்ளார்.
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் வசித்து வரக்கூடிய இரண்டு குழந்தைகளுக்கு தாயான பெண்மணிதான் செலினா.
இவர் தற்போது மீண்டும் கர்ப்பமாக இருக்கிறார். இந்நிலையில் இவர் ஏற்கனவே வில்லியம் ஜேம்ஸ் என்பவரை காதலித்து விட்டு அதன் பின் குடும்ப சூழ்நிலை காரணமாக வேறு ஒருவரை திருமணம் செய்துகொண்டு சந்தோஷமாக வாழ்ந்து வருகிற நிலையில், கடந்த ஒரு வாரமாக அவரை காணவில்லை என குடும்பத்தினர் போலீசில் புகார் அளித்ததை அடுத்து போலீசார் தீவிரமாக இவரை தேடி வந்துள்ளனர்.
ஒரு வாரம் ஆகியும் செலினா குறித்த தடயங்கள் எதுவும் கிடைக்கவில்லை என்பதால் அவரது முன்னாள் காதலனான வில்லியம் ஜேம்ஸிடம் சந்தேகத்தின் அடிப்படையில் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
அவரது வீட்டையும் பரிசோதனை செய்துள்ளனர். அப்பொழுது அவரது சமையல் அறையில் வைக்கப்பட்டிருந்த ஃபிரிட்ஜில் செலினா கழுத்து மற்றும் முகத்தில் படு காயங்களுடன் பிணமாக அடைக்கப்பட்டு வைக்கப்பட்டிருந்ததை கண்டு மிகவும் அதிர்ச்சி அடைந்த போலீசார் உடலை மீட்டு உறவினர்களிடம் ஒப்படைத்துள்ளனர்.
மேலும் வில்லியம் மீது வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்துள்ளதுடன் கொலைக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.