தமிழகத்தில் முதலீடு... புரிந்துணர்வு ஒப்பந்தம் (MOU)

 தமிழகத்தில் கடந்த ஏப்ரல் முதல் செப்டம்பர் வரை 42 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள், 31 ஆயிரத்து 464 கோடி ரூபாய் முதலீடுகளுக்கு கையெழுத்திடப்பட்டு உள்ளன. தற்போது 14 புதிய தொழில் திட்டங்களை தொடங்குவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டன. இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

 

சென்னை, காஞ்சி, நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, ராமநாதபுரம், திருப்பூர், திருவள்ளூர் மற்றும் கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் 14 தொழில் நிறுவனங்கள் புதிய முதலீட்டு திட்டங்களை 10 ஆயிரத்து 55 கோடி ரூபாய் முதலீட்டில் தொடங்க தொழில்துறை சார்பில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடும் நிகழ்ச்சி தலைமைச்செயலகத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் திங்கள் கிழமை நடைபெற்றது.

 

இத்திட்டங்களின் மூலம் புதிதாக 7 ஆயிரம் பேருக்கு  வேலை வாய்ப்புகள் உருவாகும். தமிழகத்தில் கடந்த ஏப்ரல் முதல் செப்டம்பர் வரை 42 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள், 31 ஆயிரத்து 464 கோடி ரூபாய் முதலீடுகளுக்கு கையெழுத்திடப்பட்டு உள்ளன. தற்போது 14 புதிய தொழில் திட்டங்களை தொடங்குவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டன.