ராணுவ வீரர்கள் வாரிசுகளுக்கு இடஒதுக்கீடு - உயர்நீதிமன்ற கிளை கேள்வி

 நாட்டின் எல்லையை காக்கும் பாதுகாப்புப் படை வீரர்களின் வாரிசுகளுக்கு உரிய இடஒதுக்கீடு தர வேண்டாமா? என உயர்நீதிமன்ற கிளை நீதிபதி கேள்வி எழுப்பியுள்ளார்.


ராணுவ வீரர்களின் வாரிசுகளுக்கு மாணவர் சேர்க்கையில் முன்னுரிமை தரும் முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும். மறுபரிசீலனை செய்து உரிய முடிவை தெரிவிக்க தமிழக தலைமைச் செயலருக்கு உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது.


வீரர்களின் வாரிசுகளுக்கு இடஒதுக்கீடு இல்லை என்றால் அனைத்துவகை இடஒதுக்கீடும் தேவையில்லை என்று நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.


நாம் அவர்களுக்கு இடஒதுக்கீடு வழங்கவில்லை எனில் யார் கொடுப்பார்கள் என உயர்நீதிமன்ற கிளை கேள்வி எழுப்பியுள்ளது.