சுவையான வெஜிடபிள் வெண் பொங்கல்

 



 


வெண் பொங்கல் அனைவருக்கும் விருப்பமான ஒரு உணவு.


அதையே காய்கறிகளை இணைத்துச் செய்தால், சத்தும் சுவையும் கூடும் அல்லவா? அப்படியான வெஜிடபிள் வெண் பொங்கல் எப்படி செய்வது என்பதை இங்கு பார்க்கலாம்.


சுவையான இந்த வெஜிடபிள் வெண் பொங்கல், காலை, மதியம், இரவு ஆகிய 3 வேளைகளுக்கும் உகந்தது.


அலுவலகம் அல்லது பணி செய்கிற இடங்களுக்கு இதை எடுத்துச் சென்று சாப்பிடத் தோதானது.


தேவையான பொருட்கள் :


பச்சரிசி – அரை கப்,


பாசிப் பருப்பு – கால் கப்,


வெங்காயம் – 1,


பிடித்தமான காய்கறிகள் – 1 கப்,


பச்சை பட்டாணி – அரை கப்,


இஞ்சி – 1 துண்டு,


கறிவேப்பிலை – சிறிதளவு,


பெருங்காயத்தூள்,


நெய் – சிறிதளவு, உப்பு – தேவைக்கு,


மிளகு, சீரகம் – சிறிதளவு, 


வெஜிடபிள் வெண் பொங்கல் செய்முறை :


முதலில் வெங்காயம், காய்கறிகளை பொடியாக நறுக்கி கொள்ளவும். இஞ்சியை தோல் நீக்கி துருவிக் கொள்ள வேண்டும். பச்சை பட்டாணியை வேக வைத்துக்கொள்ளலாம்.


அரிசி, பாசிப் பருப்பை நீரில் கழுவி போதுமான அளவு நீர் சேர்த்து குக்கரில் வேக வையுங்கள். ஓரளவு வெந்ததும் பெருங்காயத்தூள், நெய், உப்பு, கறிவேப்பிலை சேர்த்து கிளறி இறக்குங்கள்.


வாணலியில் எண்ணெய்/நெய்  ஊற்றி அது சூடானதும் சீரகம்,  மிளகு, சேர்த்து தாளித்த பின்னர் அதனுடன் இஞ்சி, வெங்காயம் சேர்த்து வதக்குங்கள். பின்னர் காய்கறிகளை கொட்டி, உப்பு, பச்சை பட்டாணி சேர்த்து வதக்குங்கள்.


காய்கறிகள் நன்கு வெந்ததும் பொங்கலில் சேர்த்து கிளறி இறக்குங்கள். இப்போது சுவையான வெஜிடபிள் வெண் பொங்கல் ரெடி.


இதில் இன்னொரு வசதி, காய்கறிகள் சேர்ந்திருப்பதால் தனியாக சட்னி, சாம்பார் அவசியம் இல்லை. தேவைக்கு பயன்படுத்தினாலும் தப்பில்லை.


நாளை உங்களது வீட்டில்  வெஜிடபிள் வெண் பொங்கல்   செய்து அனைவரையும் அசத்திடுங்கள்.


இதுபோன்ற பல பயனுள்ள  தகவல்களுடன் மேலும் நமது  உண்மை   செய்திகள்  குழுவின் சமையல்  பயணம் தொடரும்.


வணக்கம் அன்புடன் கார்த்திகா