காந்தியடிகள் காவல் விருது

 கள்ளச்சாராய ஒழிப்புப் பணியில் சிறப்பாகச் செயல்பட்ட காவல்துறை அதிகாரிகள் 5 பேருக்குக் காந்தியடிகள் காவல் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.


தோமையார்மலை மதுவிலக்குப் பிரிவு காவல் ஆய்வாளர் மகுடீஸ்வரி, முசிறி - துறையூர் மதுவிலக்குப் பிரிவு காவல் ஆய்வாளர் லதா, சேலம் மத்தியப் புலனாய்வுப் பிரிவு காவல் உதவி ஆய்வாளர் செல்வராஜு, திருவில்லிப்புத்தூர் தலைமைக் காவலர் சண்முகநாதன், கீழ்க்கொடுங்காலூர் தலைமைக் காவலர் ராஜசேகரன் ஆகியோர் கள்ளச்சாராய ஒழிப்பில் சிறப்பாகப் பணியாற்றியுள்ளனர்.


இவர்கள் ஐவருக்கும் குடியரசு நாளன்று காந்தியடிகள் காவலர் விருது வழங்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். விருதுடன் ஒவ்வொருவருக்கும் பரிசுத் தொகையாக நாற்பதாயிரம் ரூபாய் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.


இவ்விருது, முதல்வரால் 2021 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 26 ஆம் நாள், குடியரசு தினத்தன்று வழங்கப்படும். 


இவ்வாறு தமிழக அரசு தெரிவித்துள்ளது.