இந்தியா -சீனா இடையே பேச்சுவார்த்தை

 நாளை (அக்டோபர் 12-ஆம் தேதி )இந்தியா - சீனா இடையே கமாண்டர் அளவிலான பேச்சுவார்த்தை நடைபெறுகிறது.


இந்தியா மற்றும்  சீனா இடையே, கிழக்கு லடாக் பகுதியில், ஐந்து மாதங்களாக, மோதல் போக்கு நிலவி வருகிறது. எல்லையில் அமைதியை ஏற்படுத்த, இருநாட்டு ராணுவ உயர் அதிகாரிகளின் அமைதி பேச்சு, பல்வேறு கட்டங்களாக நடந்து வருகின்றன. சமீபத்தில் நடந்த பேச்சில், சர்ச்சைக்குரிய எல்லைப் பகுதியில், மேலும் படைகள் குவிக்கப்படாது என இரு தரப்பும் ஒப்புக்கொண்டது.


இதுவரை இந்தியா மற்றும் சீனா இடையே 6 முறை பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது.இந்நிலையில் லடாக் எல்லை பிரச்னை தொடர்பாக அக்டோபர் 12-ஆம் தேதி இந்தியா - சீனா இடையே கமாண்டர் அளவிலான பேச்சுவார்த்தை நடைபெறுகிறது.