பிளாஸ்மா தானத்திற்கு அழைப்பு - தர்மேந்திர பிரதான்

 மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பிளாஸ்மா தானம் செய்துள்ளார். கடந்த ஜூலை மாதம் மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதானிற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.


இதை அடுத்து சிகிச்சைக்கு பின்அவர் கொரோனாவிலிருந்து மீண்டார். இந்நிலையில் கொரோனாவால் மீண்ட பலர் தங்களது பிளாஸ்மாக்களை தானம் செய்து வருகின்றனர்.


ஒடிஷா மாநிலம் கட்டாக்கில் உள்ள எஸ்சிபி மருத்துவமனையில் 03.10.2020 தர்மேந்திர பிரதானும் பிளாஸ்மா தானம் செய்து உள்ளார்.


பிளாஸ் தானம் செய்த பிறகு  பேசிய அவர் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க கொரோனாவிலிருந்து மீண்டவர்கள் பிளாஸ்மா தானம் செய்ய முன்வர வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.