டெல்லியின் அக்ஷர்தாம் கோயில் மீண்டும் திறப்பு

 டெல்லியின் சுவாமிநாராயண்அக்ஷர்தாம் கோயில்  வருகின்ற அக்டோபர் 13ம் தேதி முதல் கடுமையான கொரோனா விதிமுறைகளுடன் மீண்டும் திறக்கப்படுகிறது.


குறிப்பாக, மாலை 5 மணி முதல் இரவு 7 மணி வரை ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான மக்கள் மட்டுமே கோவிலின் வளாகத்திற்குள் நுழைய அனுமதிக்கப்படுவார்கள். இதற்கிடையில்,கோயிலின் கண்காட்சி மண்டபம் மூடப்பட்டிருக்கும், இசை நீரூற்று மட்டுமே திறந்திருக்கும்.


கடந்த மார்ச் மாதத்தில், தன்னார்வலர்கள், பார்வையாளர்களின் பாதுகாப்பதற்காக சுவாமிநாராயண் சன்ஸ்தா அதன் அனைத்து கோயில்களையும் உலகளவில் மூடியது குறிப்பிடத்தக்கது.