சென்னையில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிப்பு

 சென்னையில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக 36 இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.


கொரோனா  வைரஸின் தாக்கம் நாளுக்குநாள் தமிழகம் முழுவதிலும் தீவிரம் அடைந்து கொண்டே செல்லும் நிலையில், தமிழகத்தில் சென்னையில் தான் அதிக அளவில் கொரானா வைரஸ் பாதிப்பு உள்ளது.


கடந்த சில நாட்களாக இதன் தாக்கம் குறைந்து இருந்த நிலையில் மீண்டும் தற்பொழுது சென்னையில் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.


இந்நிலையில் நேற்று வரை 10 இடங்கள் மட்டுமே கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது கொரோனா அதிகமுள்ள இடங்களாக சென்னையில் 36 இடங்கள் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளது.