அமமுக பொருளாளர் வெற்றிவேல் காலமானார்


தமிழகத்தில் முன்பை விட சற்று கொரோனா பரவல் குறைந்துள்ளது. இந்த கொரோனா வைரசால் அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் என பலர் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் 10,000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.


கொரோனா காரணமாக காங்கிரஸ் எம்.பி வசந்த குமார், பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் உயிரிழந்தனர். கடந்த 6-ம் தேதி அ.ம.மு.க பொருளாளர் வெற்றிவேல் கொரோனா பாதிக்கப்பட்டு வீட்டிலேயே தனிமைப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டது. திடீரென்று அவருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட  ராமச்சந்திரா தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.


இந்நிலையில், மருத்துவமனையில் சிகிக்சை பெற்று வந்த அமமுக பொருளாளர் வெற்றிவேல் சிகிக்சை பலனின்றி காலமானார்.


_________________________


அ.ம.மு.க பொருளாளர் வெற்றிவேல் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிக்சை பெற்று வந்த நிலையில் சிகிக்சை பலனின்றி உயிரிழந்தார்.


இந்நிலையில், அமமுக பொருளாளர் வெற்றிவேலின் மறைவையொட்டி ஒருவாரம் துக்கம் அனுசரிக்கப்படும் என்றும், அமமுக கொடிகள் அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டு நிகழ்ச்சிகள் அனைத்தும் ஒருவாரத்திற்கு ரத்து செய்யப்படுவதாக அமமுக தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


வெற்றிவேல் மறைவுக்கு ஸ்டாலின் இரங்கல்


 திமுக தலைவர் முக ஸ்டாலின் தனது இரங்கலை தெரிவித்துள்ளார். அதில், வெற்றிவேல் காலமானார் என்ற செய்தி கேட்டு மிகுந்த அதிர்ச்சி அடைந்தேன். வெற்றிவெல் தொகுதி மக்களின் பிரச்சனைகளை சட்டமன்றத்தில் ஆக்கபூர்வமாக பேசக்கூடியவர், இவரின் குடும்பத்தினருக்கும், கட்சியினருக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் என கூறியுள்ளார்.


வெற்றிவேல் மறைவுக்கு சீமான் இரங்கல் தெரிவித்துள்ளார்.


அமமுக பொருளாளர் அருமைச் சகோதரர் வெற்றிவேல் அவர்கள் கொரோனா நோய்த்தொற்றினால் உயிரிழந்த செய்தியறிந்து பெருந்துயரடைந்தேன். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், கட்சியினருக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்து, துயரில் பங்கெடுக்கிறேன் என்று அந்த பதிவில் தெரிவித்துள்ளார்.