பீகார் தேர்தல்- இலவச கொரோனா தடுப்பூசி - பாஜக அறிவிப்பு

 மீண்டும் ஆட்சிக்கு வந்தால் அனைவருக்கும் இலவசமாக கொரோனா தடுப்பூசி வழங்கப்படும் என்று பாஜக தேர்தல் அறிக்கையில் தெரிவித்துள்ளது.


பீகாரில் நிதிஷ் குமார் தலைமையில் ஐக்கிய ஜனதா தள ஆட்சி வருகின்ற நவம்பர் மாதத்துடன் முடிவடைகிறது.


எனவே 243  தொகுதிகளை அடங்கிய பீகாரில் ,பீகார் சட்டப்பேரவைத் தேர்தல் 3 கட்டமாக நடைபெறும் என்று இந்திய தலைமை தேர்தல் ஆணையம் தெரிவித்தது.ஆகவே பீகார் தேர்தல் களம் தற்போது சூடு பிடித்துள்ளது.


இந்நிலையில் பாட்னாவில்  நடைபெற்ற நிகழ்ச்சியில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பாஜகவின்  தேர்தல் அறிக்கையை வெளியிட்டார்.


அந்த அறிக்கையில் , பீகாரில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சிக்கு வந்தால் அனைவருக்கும் இலவசமாக கொரோனா தடுப்பூசி வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.