திருமணம் செய்வதற்காக மட்டும் மதம் மாறுவதை ஏற்க முடியாது

 



திருமணம் செய்வதற்காக மட்டும் மதம் மாறுவதை ஏற்க முடியாது' என அலகாபாத் உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.


மதம் மாறி திருமணம் செய்ததால் பாதுகாப்பு அளிக்கக் கோரி தம்பதி தாக்கல் செய்த மனுவை அலகாபாத் உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.


உத்தரப் பிரதேச மாநிலத்தில் பிறப்பால் இஸ்லாம் மதத்தைச் சேர்ந்த பெண் ஒருவர், திருமணம் செய்வதற்கு ஒரு மாதத்துக்கு முன்னதாக இந்து மதத்துக்கு மாறியுள்ளார்.


மதம் மாறி திருமணம் செய்துகொண்டுள்ள தம்பதி, பாதுகாப்பு கேட்டு அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளனர். அந்த வழக்கு 30.10.2020 நீதிபதி மகேஷ் சந்திரா திரிபாதி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.


அப்போது அவர் 2014-ம் ஆண்டு நூர் ஜஹான் பேகம், அஞ்சலி மிஸ்ராவின் வழக்கைச் சுட்டிக் காட்டி, திருமணம் என்ற காரணத்துக்காக மதம் மாறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது’ என்று கூறி மனுவைத் தள்ளுபடி செய்தார்.


மேலும், இந்த விவகாரத்தில் இந்திய அரசியலைப்புச் சட்டம் சட்டப்பிரிவு 226-யில் தலையிடுவதை விரும்பவில்லை’ எனக் குறிப்பிட்டுள்ளார்.


2014-ம் ஆண்டு நூர் ஜஹான் பேகம் என்ற பெண், இந்து மதத்திலிருந்து மதம் மாறி, இஸ்லாமியர் ஒருவரைத் திருமணம் செய்து கொண்டார். அந்த தம்பதி பாதுகாப்புகோரி அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது.


அந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், ‘ஒரு இஸ்லாமிய பையனை திருமணம் செய்துகொள்வத்றாக ஒரு இந்துப் பெண், இஸ்லாம் குறித்து எதுவுமே தெரிந்துகொள்ளாமல் வெறும் திருமணத்துக்காக மட்டும் மதம் மாறுவதை ஏற்றுக்கொள்ள முடியுமா?’ என்று கேள்வி எழுப்பி மனுவைத் தள்ளுபடி செய்தனர்.