இந்தியாவில் செப்டம்பர் மாதத்தில் கரோனா பாதிப்பு நிலவரம்

 



செப்டம்பர் மாதம் முடிந்துள்ள நிலையில், கடந்த மாதத்தில் மட்டும் 26 லட்சத்துக்கு 21 ஆயிரத்து 418 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.


ஒட்டுமொத்த கரோனா பாதிப்பு எண்ணிக்கை 63 லட்சத்து 12 ஆயிரத்து 584 ஆக உள்ளது. 41.53 சதவீதம் பேர் செப்டம்பர் மாதத்தில் மட்டும் பாதிக்கப்பட்டுள்ளனர்.


செப்டம்பர் மாதத்தில் கரோனா சிகிச்சையிலிருந்து 24 லட்சத்து 33 ஆயிரத்து 319 பேர் குணமடைந்துள்ளனர். ஒட்டுமொத்தமாக 52 லட்சத்து 73 ஆயிரத்து 201 பேர் குணமடைந்துள்ளனர். இதில் 46.15 சதவீதம் பேர் செப்டம்பர் மாதத்தில் மட்டும் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.


தற்போதுவரை கரோனாவில் உயிரிழப்பு என்பது 98,678 ஆக இருக்கிறது. இதில் 33.84 சதவீதம், அதாவது 33 ஆயிரத்து 390 பேர் செப்டம்பர் மாதத்தில் மட்டும் உயிரிழந்துள்ளனர்.


கரோனாவிலிருந்து குணமடைந்து வீடு திரும்பும் மக்களில் உலக அளவில் இந்தியா முதலிடத்தில் இருந்து வருகிறது. அதைத் தொடர்ந்து பிரேசிலும், அமெரிக்காவும் உள்ளன என்று ஜான்ஸ் ஹோப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.


உலக அளவில் கரோனாவில் மோசமாகப் பாதிக்கப்பட்ட நாடுகள் வரிசையில் அமெரிக்காவுக்கு அடுத்து இந்தியாவும், மூன்றாவதாக பிரேசிலும் இடம் பெற்றுள்ளன. அதேபோல உலக அளவில் கரோனாவில் அதிகமான உயிரிழப்பைச் சந்தித்த நாடுகளில் அமெரிக்கா, பிரேசிலுக்கு அடுத்து இந்தியா 3-வது இடத்தைப் பிடித்துள்ளது.