திருக்கருப்பறியலூர் -குற்றம் பொறுத்த நாதர் கோயில்

 



திருக்கருப்பறியலூர் -குற்றம் பொறுத்த நாதர் கோயில்  சம்பந்தர், சுந்தரர் பாடல் பெற்ற சிவாலயமாகும்.


சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில், 27-வது தேவாரத் தலமாக இருப்பது திருகருப்பறியலூர். இங்கு இறைவன் குற்றம் பொறுத்த நாதர் சுயம்பு மூர்த்தியாக எழுந்தருளியிருக்கிறார்.


இந்திரன் தன் வஜ்ஜிராயுதத்தை இறைவன் மேல் எறிந்தான். அதனால், ஏற்பட்ட பாவத்தை இங்கே போக்கி கொண்டான். இறைவன் இந்திரனின் குற்றத்தைப் பொறுத்து அருளியதால் இவர் `குற்றம் பொறுத்த நாதர்’ என அழைக்கப்படுகிறார். இறைவனுக்கு `அபராத சமேஷ்வரர்’ என்ற பெயரும் உண்டு. 


சூரிய தோஷம் நீக்கும் பரிகாரத் தலம் குற்றம்பொறுத்தநாதர் கோவில், திருகருப்பறியலூர்


இந்தத் திருத்தலத்திலுள்ள இறைவனை வழிபட்டால் குழந்தை பாக்கியம் கிடைக்கும். குழந்தை பிறந்து, இறந்துவிடும் தோஷம் உள்ளவர்களுக்கும், ஆண், பெண் வாரிசு வேண்டுபவர்களுக்கும் நன்மை நடக்கும் என்பது ஐதீகம். இந்தத் திருத்தலம் நாகப்பட்டினம் மாவட்டம் வைத்தீஸ்வரன்கோயில் அருகில் பட்டவர்த்தி என்னும் ஊரின் வடகிழக்கே 2 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. 


இந்தக் கோயில் கிழக்கு நோக்கிய மூன்று நிலை ராஜகோபுரத்துடன் அமைந்துள்ளது. உள் மண்டபம் வௌவால் நெத்தி மண்டப அமைப்பில் அமைந்திருக்கிறது. மூலவர் குற்றம்பொறுத்த நாதர் சுயம்பு லிங்கமாகக் கிழக்கு நோக்கியும், தாயார் கோல்வளை நாயகி தெற்கு நோக்கியும் பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர். கருவறை சுற்றுப் பிராகாரத்தில் விநாயகர், லிங்கோத்பவர், துர்கை மற்றும் பிரம்மா காட்சி தருகின்றனர்.


விசித்திராங்கன் என்ற மன்னன் தன் மனைவி சுசீலையுடன் குழந்தை பாக்கியம் வேண்டி இங்கு வந்து வழிபாடு செய்து, இறைவன் அருளால் குழந்தை பெற்றான். இதனால் மகிழ்ந்த மன்னன் இந்தத் தலத்தை அழகுறக் கட்டினான் என்பது வரலாறு. 


சிலருக்குக் கருவிலே சிசு கலைவது உண்டு. சிலருக்கு குழந்தைப் பிறந்தவுடன் இறந்துவிடும். சில குடும்பங்களில் விபத்துகளினால் துர்மரணம் நிகழ்வதும் உண்டு. இவை அனைத்தும் 'ஆலாள' என்ற தோஷத்தினால் ஏற்படுகின்றன. இங்குள்ள இறைவனை வந்து வழிபட்டால் மேற்படி தோஷம் நீங்கும் என்பது நம்பிக்கை!


சூரிய பகவான் இந்தத் தலத்தை வழிபட்டதால் `தலைஞாயிறு’ என்றும் அழைக்கப்படுகிறது. தான் பெற்ற சாபத்தில் இருந்து விடுபடப் பல சிவஸ்தலங்களில் சூரியன் வழிபட்டான். அவ்வாறு வழிபட்ட தலங்கள் அனைத்தும் சூரிய தோஷ பரிகாரத் தலங்களாக போற்றப்படுகின்றன. அந்த வகையில், திருக்கருப்பறியலூர் தலமும் சூரிய தோஷ பரிகாரத் தலமாக விளங்குகிறது. இந்த தோஷம் உள்ளவர்கள் இந்தத் தலத்துக்கு வந்து இறைவனை வழிபடுவதன் மூலம் தோஷம் நீங்கப் பெறலாம்.


சூரியன் தான் பெற்ற சாபத்தில் இருந்து விடுபட பல சிவஸ்தலங்களில் பெருமானை வழிபட்டான். அவ்வாறு சூரியன் வழிபட்ட தலங்கள் யாவும் சூரிய தோஷ பரிகாரத் தலங்களாக போற்றப்படுகின்றன.


அவ்வகையில், திருக்கருப்பறியலூர் தலமும் சூரிய தோஷ பரிகாரத் தலமாக விளங்குகிறது. ஜாதக ரீதியாக சூரிய தோஷம் உள்ளவர்கள் இத்தலம் வந்து இறைவனை வழிபடுவதன் மூலம் பலன் பெறலாம்.


தருமபுர ஆதீனத்தின் கட்டுப்பாட்டில் உள்ள இவ்வாலயம், கிழக்கு நோக்கிய மூன்று நிலை ராஜகோபுரத்துடன் அமைந்துள்ளது. உள்மண்டபம் வெளவால் நெத்தி மண்டப அமைப்பில் காணப்படுகிறது.


இந்தத் தலத்திலுள்ள இறைவன் அனுமனால் பூஜிக்கப்பட்டவர். யுத்தத்தில் ராவணனைக் கொன்றார் ராமர். அந்த தோஷத்தை நீக்க ராமேஸ்வரத்தில் சிவபூஜை செய்ய நினைத்தார். அனுமனிடம் இரண்டு நாழிகைகளுக்குள் சிவலிங்கம் கொண்டு வருமாறு கட்டளையிட்டார். ராமரின் கட்டளையை ஏற்ற அனுமன் வடதிசை நோக்கிச் சென்றார். ஆனால், அனுமன்  வரத் தாமதமானது. 


ராமர் மணலால் லிங்கம் பிரதிஷ்டை செய்து வழிபட்டார். அவரது தோஷமும் நீங்கியது. தான் வருவதற்குள் ராமர் பிரதிஷ்டை செய்ததை அறிந்த அனுமன் வருந்தினான். அந்த லிங்கத்தை தன் வாலால் கட்டி இழுத்தான். முடியவில்லை. இப்படிச் செய்ததால் அனுமனுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.


``சிவனை நோக்கி தவமிருந்தால் அந்த அபராதம் நீங்கும்’’ என ராமர் அனுமனுக்கு யோசனை கூறினார். அனுமனும் அவ்வாறே செய்தான். அவன் முன்னால் சிவன் தோன்றி ``அனுமனே.. நீ தலைஞாயிறு சென்று வழிபாடு செய்தால் இந்த தோஷம் விலகும்’’ என அருள்பாலித்தார். அனுமனும் அவ்வாறே இங்கு வந்து வழிபட்டு தோஷம் நீங்கப் பெற்றார். அதன் பிறகு சிவனின் கருணைக்கு வியந்து இந்தத் தலத்தின் வட கிழக்கில் தன் பெயரால் ஒரு லிங்கம் அமைத்து, வழிபாடு செய்தார். இன்று, அந்தத் தலம் `திருக்குரக்கா’ என அழைக்கப்படுகிறது.


``இந்தத் தலத்தில் செய்யும் அறச்செயல்கள் ஒன்றுக்குப் பத்தாக பெருகும்’’ என்பதை பிரம்மன் வசிஷ்டருக்குக் கூறினார். அதனால் வசிஷ்டர் இங்கு லிங்கம் அமைத்து வழிபட்டு, மெய்ஞானம் பெற்றார் என்கிறது தலபுராணம்.


தலைஞாயிறு குற்றம் பொறுத்த நாதர் கோயில் (திருக்கருப்பறியலூர்) சம்பந்தர், சுந்தரர் பாடல் பெற்ற சிவத்தலமாகும். தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரி வடகரைத் தலங்களில் அமைந்துள்ள 27வது தலம் ஆகும்.


இத்தலம் நாகப்பட்டினம் மாவட்டத்தில் மயிலாடுதுறை நகரின் அண்மையில் அமைந்துள்ளது]


இக்கோயிலுள்ள இறைவன் குற்றம் பொறுத்த நாதர், இறைவி கோல்வளைநாயகி இக்கோயிலில் சட்டநாதருக்கான தனி சன்னதி மலைக்கோயில் என்ற பெயரில் அமைந்துள்ள கோயிலில் காணப்படுகிறது.


இந்திரன், இறைவன் என்றறியாமல் அவர்மீது வச்சிரம் எறிந்த குற்றத்தைப் பொறுத்தருளியமையால் குற்றம் பொறுத்த நாதர் ஆனார் என்பது தொன்நம்பிக்கை (ஐதிகம்).


மூலவர் குற்றம்பொறுத்தநாதர் சுயம்பு லிங்கமாக கிழக்கு நோக்கியும் அம்பாள் கோல்வளைநாயகி, தெற்கு நோக்கியும் காட்சி தருகின்றனர். கருவறை சுற்றுப் பிராகாரத்தில் விநாயகர், லிங்கோத்பவர், துர்க்கை மற்றும் பிரம்மா காணப்படுகின்றனர்.


வெளிப் பிராகாரத்தில் சீர்காழியில் இருப்பதுபோல உயர்ந்த தனிக்கோயிலாக சட்டைநாதர் சந்நிதி உள்ளது. மேலேறிச் சென்று தோணியப்பரைத் தரிசித்து அதற்கும் மேலே சென்று சட்டைநாதரைத் தரிசிக்க செங்குத்தான மரப்படிகளை ஏற வேண்டும்.


தோணியப்பர் சந்நிதியை இத்தலத்தில் கர்ப்பஞானேஸ்வரர் கர்ப்பஞானபரமேஸ்வரி சந்நிதி என்றழைக்கின்றனர். தலமரமான கொகுடிமுல்லை, லிங்கோத்பவருக்கு எதிரில் காணப்படுகிறது.


இறைவர் திருப்பெயர்:  குற்றம் பொறுத்த நாதர்.
இறைவியார் திருப்பெயர்:  கோல்வளை நாயகி.
தல மரம்:  கொகுடி முல்லை.
தீர்த்தம் :  இந்திர தீர்த்தம்.
வழிபட்டோர்:  வசிஷ்டர், ஆஞ்சநேயர், இந்திரன்.


தல வரலாறு :


 கொகுடி முல்லையைத் தலக்கொடியாக கொண்டதால் இப் பெயர் பெற்றது.(கருப்பறியலூர் என்பது ஊரின் பெயர். கோயிலின் பெயர் கொகுடிக்கோயில்).


இறுமாப்புடன் இருந்த இந்திரன், முன் கயிலையில் இறைவர் பூத உருவத்துடன் தோன்றினார். அதனை அறியாத இந்திரன் வச்சிராயுதத்தை அவர் மேல் எறிந்தான். பின் தன் பிழையை உணர்ந்து பொறுக்கவேண்டியதால், இவ்வூர் இறைவன் பெயர் குற்றம் பொறுத்த நாதர் என்றாயிற்று.


இத்தலத்துக்கு திருஞானசம்பந்தர் பதிகம் ஒன்றும், சுந்தரர் பதிகம் ஒன்றும் என இரண்டு பதிகங்கள் உள்ளன.


தேவாரப் பாடல்கள் : 1. சம்பந்தர் - சுற்றமொடு பற்றவை 
                                                2. சுந்தரர்   -சிம்மாந்து சிம்புளித்து


சுந்தரர் தனது பதிகத்தில் இக்கோவிலை கொகுடிக்கோயில் என்று ஒவ்வொரு பாடலிலும் குறிப்பிட்டுள்ளனர். தனது பதிகத்தின் முடிவில், அவரது பதிகத்தை தினமும் பாடுவர்களுக்கு அவர்கள் செய்த வினை யாவும் வாடுவது மிகவும் எளிது என்று குறிப்பிடுகிறார். 


நலந்தரு புனற்புகலி ஞானசம்பந்தன்
கலந்தவர் கருப்பறியன் மேய கடவுள்ளைப்
பலந்தரு தமிழ்க்கிளவி பத்துமிவை கற்று
வலந்தரும் அவர்க்கு வினை வாடல் எளிதாமே.


சிறப்புக்கள் :


இத்தலத்தில் நாம் செய்யும் அறச்செயலகள் யாவும் பதின்மடங்காக பெருகும் என்று வசிஷ்டருக்கு பிரம்மா கூறியதாக தல புராணம் குறிப்பிடுகிறது. வசிஷ்டரும் இத்தலத்தில் லிங்கம் அமைத்து வழிபட்டு உய்வுற்றார் என்று தல புராணம் மேலும் குறிப்பிடுகிறது. 


இக்கோயிலில் சீர்காழி மலைக் கோயிலில் உள்ளது போல் அம்மையப்பரும், சட்டைநாதர் திருவுருவமும் உள்ளது,             
            இதனை, மேலைக்காழி எனவும் கூறுவர். 
            சோழர் காலக் கல்வெட்டுகள் உள்ளன.


அமைவிடம் இந்தியா – மாநிலம் : தமிழ் நாடு இஃது வைத்தீசுவரன்கோயில் இரயில் நிலையத்திலிருந்து வடமேற்கே 8-கி.மீ தூரத்தில் உள்ளது.


மயிலாடுதுறை, வைதீஸ்வரன்கோயில் ஆகிய இடங்களிலிருந்து தலைஞாயிறு (இத்தலத்தின் இன்றைய பெயர்) செல்ல பேருந்து வசதி உள்ளது.



இதுபோன்ற பல பயனுள்ள  தகவல்களுடன் மேலும் நமது  உண்மை   செய்திகள்  குழுவின் ஆன்மீக பயணம் தொடரும்.



 



தென்னாடுடைய சிவனே போற்றி  எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி



ஓம்  சிவாய நம  ஓம் சிவ சிவ ஓம்






அன்பே சிவம் - சிவமே அன்பு   திருச்சிற்றம்பலம்


ஆன்மீக வாழ்வுக்கு புராதன கோவில்கள் பற்றிய தகவல்கள் அவசியம்


நன்றி. 


பக்தியுடன்  மோகனா  செல்வராஜ்