4 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகள் ஹெல்மெட் அணிவது கட்டாயம்

 4 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகள் ஹெல்மெட் அணிவது கட்டாயம்.


இன்று பலரும் இருசக்கர வாகனங்களில் செல்லும் போது, தலைக்கவசம் அணிவதை ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்வதே இல்லை. இந்த அலட்சியம் தான், ஒரு கட்டத்தில் பெரிய அளவிலான ஆபத்துகளை சந்திக்க வைக்கிறது.


இந்நிலையில்,  கர்நாடகா மாநிலத்தில், 4 வயதிற்கு மேற்பட்ட குழந்தைகள் கண்டிப்பாக ஹெல்மெட் அணிய வேண்டும் என்றும், ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனத்தில் ஏற்றி சென்றால், ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.