ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகள்- தமிழகத்தில் நடந்த சம்பவம்.

 நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை மகப்பேறு சிகிச்சை பிரிவில் அம்பாசமுத்திரம் அருகே உள்ள பிரம்மதேசத்தை சேர்ந்த இசக்கியம்மாள் என்ற 20 வயது இளம்பெண் பிரசவத்திற்காக கடந்த 7ம் தேதி அனுமதிக்கப்பட்டார்.


அவருக்கு நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை மருத்துவர்கள் பிரசவம் பார்த்த நிலையில் ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகள் பிறந்துள்ளது. அதில் இரண்டு ஆண் குழந்தைகளும், 2 பெண் குழந்தைகளும் பிறந்துள்ளது.


குழந்தைகள் குறைந்த எடையில் பிறந்துள்ள நிலையில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மருத்துவர்களின் பரிந்துரையின் பேரில் நான்கு குழந்தைகளையும் பிரத்தியேக தீவிர பச்சிளம் குழந்தை சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இருப்பினும் தாயும், குழந்தைகளும் நலமுடன் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.


இதேபோல பாளையங்கோட்டை பகுதியை சேர்ந்த 23 வயது பெண் தலைப் பிரசவத்திற்காக பெருந்தொற்று பாதிப்புடன் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவருக்கும் 3 ஆண் குழந்தைகள் பிறந்துள்ளது.