இன்றைய ராசிபலன் 26-10-2020

 ​மேஷம்


உங்களுக்கு சகலவிதத்திலும் அனுகூலமான நாளாக இருக்கும். உடன் இருப்பவர்களின் ஆதரவு சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் மன நிம்மதி தருவதாக இருக்கும். குறிப்பாக உங்களுடைய பேச்சில் சற்று நிதானத்தைக் கடைப்பிடிப்பதன் மூலம் வளமான பலன்களை அடையமுடியும். சகல விதத்திலும் ஒரு மேன்மையை அடைய முடியும். தொழிலில் மேன்மையை அடைவீர்கள். பயணம் மூலம் அனுகூலமான பலன்களை பெறுவீர்கள்.


​ரிஷபம்


உங்களின் வளமும், வலிமையும் கூடும். மறைமுக எதிரிகள் நீங்குவர். மற்றவர்களால் இருந்த நெருக்கடிகள் குறைவதால், மன நிம்மதி அதிகரிக்கும். தொழிலில் லாபங்கள் அதிகரிக்கும். கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள். பங்குதாரர்கள் சாதகமாக செயல்படுவர். உத்தியோகத்தில் மேலதிகாரிகள் ஆதரவாகவும், சக பணியாளர்களுடன் இருந்த கருத்து வேறுபாடு நீங்கி நிம்மதி ஏற்படும்.


​மிதுனம்


நீங்கள் எதிலும் பொறுமையோடு செயல்பட வேண்டிய நாள். தேவையற்ற அலைச்சலும், எதிர்பார்த்த பண வரவு, உதவி கிடைப்பதில் தாமதம் ஏற்படும். உடன் இருப்பவர்களே உங்களுக்கு சில பிரச்னைகள் தரக்கூடும். அதுமட்டுமல்லாமல் உங்களுக்கு இன்று சந்திராஷ்டமம் இருப்பதால் எந்த செயலைச் செய்வதாக இருந்தாலும் நிதானித்தும், சிந்தித்தும் செயல்படுவது நல்லது. தொழிலைப் பொறுத்த வரையில் வேலையாட்களை அனுசரித்து செல்வது அவசியம். உத்தியோகஸ்தர்கள் மேலதிகாரிகளையும், உடன் வேலை செய்பவர்களுடன் அனுசரித்து செல்வது அவசியம்.


கடக ராசி


உங்கள் செயலுக்கு பரிபூரண வெற்றி கிடைக்கும். கடினமான வேலையைக் கூட சிறப்பாக செய்து பாராட்டைப் பெறுவீர்கள். பண வரவு சிறப்பாக இருக்கும். கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றுவீர்கள். உடன் இருப்பவர்கள் சாதகமாகவும், ஆதரவாகவும் இருப்பார்கள். தொழிலில் வேலையாட்களால் இருந்த பிரச்னை குறையும். லாபம் அதிகரிக்கும். உத்தியோகஸ்தர்கள் நீண்ட நாட்களாக எதிர்பார்த்த பதவி, பாராட்டு கிடைக்கும். சக பணியாளர்களின் ஆதரவு கிடைக்கும்.


சிம்மம்


இன்று நீங்கள் பொறுமையோடு செயல்பட வேண்டிய முக்கிய நாள். பேச்சு, செயலில் கவனமாக இருக்கவும். முன் கோபத்தை கட்டுப்படுத்திக் கொள்ளவும். பண வரவு நன்றாக இருப்பதோடு, உங்கள் தேவை பூர்த்தியாகும். வண்டி, வாகன வாங்குதல் போன்ற சுப செலவுகள் ஏற்படக்கூடும். தொழில் ரீதியாக கூட்டாளிகளை அனுசரித்து செல்வதால் லாபகரமான பலனை எதிர்பார்க்கலாம். உத்தியோகஸ்தர்கள் அதிகாரிகளை அனுசரித்து செல்வதாலும், அவர்களுடன் பேசும் போது பணிவுடன் இருபது நல்லது. ஆரோக்கியத்தில் கவனம் தேவை. உணவு விசயத்தில் அலட்சியம் வேண்டாம்.


கன்னி


எளிதில் முடியக் கூடிய வேலை கூட கால தாமதமாகும். இருப்பதை அனுபவிப்பதில் கூட இடையூறு ஏற்படும். எதையும் எதிர்கொள்ளக் கூடிய பலம் இருந்தாலும், ஆடம்பர செலவை குறைத்துக் கொள்வது அவசியம். கடினமாக உழைக்க வேண்டிய சூழல் இருந்தாலும், உங்களுக்கான தன வரவு சிறப்பாக இருக்கும். அதனால் உங்களின் கடன் பிரச்னைகள் தீர வாய்ப்புள்ளது. உத்தியோகஸ்தர்கள் அதிகாரிகளின் ஆதரவு இருந்தாலும், பணிச்சுமை இருக்கும். பயணங்களை முடிந்தவரை தள்ளிவைப்பது நல்லது.


துலாம்


எதிலும் தைரியமாக செயல்பட்டு ஒரு வளமான பலனை அடைவீர்கள். இருக்கும் இடத்தில் மதிப்பு, மரியாதை அதிகரிக்கும். உங்கள் கூட்டாளிகள் ஆதரவாக செயல்படுவார்கள். கடந்தகால பொருள் தேக்க நிலை மாறும். கணவன் மனைவி ஒற்றுமை அதிகரிக்கும். தடைப்பட்ட சுப காரியங்கள் மீண்டும் நடைப்பெற வாய்ப்புள்ளது. எதிலும் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். பேச்சில் சற்று நிதானத்தை கடைப்பிடித்தால் அனைத்தும் சுபமாக மாறும். உத்தியோகஸ்தர்கள் அனுகூல பலனை பார்க்கலாம்.


விருச்சிகம்


நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். பண வரவுகள் சிறப்பாக இருக்கும். முன்கோபத்தைக் குறைத்துக் கொண்டு நிதானமாக செயல்பட்டால் வளமான பலனை எதிர்பார்க்கலாம். அரசாங்க வாயிலான உதவிகள் தக்க சமயத்தில் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியும், மன நிறைவும் இருக்கும். கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள். உங்களுக்கு இருந்த பிரச்னைகள் குறைந்து. புதிய யுக்திகளைப் பயன்படுத்தி நல்ல வாய்ப்புகள் மூலம் பலனைப் பெறுவீர்கள் வேலையாட்கள் ஆதரவாக இருப்பார்கள்.


தனுசு


உங்களுக்கு இருந்த அலைச்சல், மன உளைச்சல் குறைந்து முன்னேற்றமான பலன்களை அனுபவிப்பீர்கள். இருக்கக் கூடிய இடத்தில் பெயர் புகழ் அதிகரிக்கும். எதிரிகளாக இருந்தவர்கள் கூட நட்பு பாராட்டக் கூடிய இனிய சூழல் நிலவும். கணவன் மனைவி இடையே ஒற்றுமை அதிகரிக்கும். பிள்ளைகளால் சாதகமான பலன் கிடைக்கும். தொழில் ரீதியாக பார்த்தால் ஒரு நல்ல நிலையை அடைவீர்கள். உத்தியோகத்தில் வேலைப்பளு குறையும். சிலருக்கு எதிர்பார்த்த நல்ல இடமாற்றம் கூட கிடைத்து குடும்பத்தில் நிம்மதி ஏற்படக்கூடிய நல்ல நாளாக இருக்கும்.


மகரம்


நீங்கள் எதிலும் சற்று பொறுமையோடு செயல்பட வேண்டிய நாள். எதிர்பார்த்த பண வரவு இருக்கும் என்றாலும், வரவுக்கு மீறிய தேவையற்ற வீண் செலவுகள் ஏற்படக்கூடும் என்பதால். எதிலும் கவனத்தோடு, சிக்கனமாக செயல்படுவது நல்லது. தொழில் ரீதியாக நீங்கள் எதிலும் முன்நின்று செயல்பட வேண்டிய நிலை இருக்கும். வேலையாட்கள் உங்களுக்கு ஆதரவாக இருக்க மாட்டார்கள் என்பதால். சிந்தித்து செயல்படுவது நல்லது. பண விஷயத்தில் கூடுதல் கவனம் தேவை. குடும்பத்தில் விட்டுக் கொடுத்து செல்வது அவசியம். உத்தியோகத்தில் நல்ல நிலை இருந்தாலும், மற்றவர்களிடம் பேசும் போது கனிவுடன் பேசவும்.


கும்பம்


பல்வேறு மேன்மைகள் ஏற்படக்கூடிய நாள். எதிர்பாரத தனவரவு ஏற்பட்டு உங்களுக்கு இருக்கக் கூடிய கடன் பிரச்னைகள், சிக்கல்கள் குறையக் கூடிய வாய்ப்புகள் ஏற்படும். குடும்பத்தில் கணவன் மனைவி ஒற்றூமை அதிகரிக்கும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். வாகனத்தில் செல்லும் போது மிக கவனமாக இருப்பது அவசியம். தொழில் ரீதியாக பார்த்தால் புதிய திட்டங்களை தீட்டி அதன் மூலம் லாபத்தை அடைவீர்கள். உத்தியோகஸ்தர்களுக்கு பணிச்சுமை குறையும். அதிகாரிகளின் கெடுபிடியிலிருந்து மீள்வீர்கள்.


மீனம்


நீங்கள் நினைத்ததெல்லாம் நடக்கும். கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள். எடுத்த முயற்சியில் வெற்றி மேல் வெற்றி ஏற்படும். நண்பர்களின் ஆதரவு சிறப்பாக இருக்கும். நவீன பொருட்களை வாங்கும் வாய்ப்பு உண்டு. பிள்ளைகளாலும், உடன் பிறந்தவர்களாலும் சாதகமான பலன்கள் ஏற்படக்கூடும். தொழில் ரீதியாக வேலையாட்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். உத்தியோகஸ்தர்களுக்கு இன்று சற்று பணிச்சுமை இருந்தாலும் அதிகாரிகளின் அன்பும், ஆதரவும் கிடைக்கும்.